கலாநிதி மனோகரக்குருக்களின் 2ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் - 2014- படங்கள்
கலாநிதி மனோகரக்குருக்களின் 2 ஆம் நினைவு தின நிகழ்வானது 30.0ம.2014 ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு சிவபூமி மன்னார் கீரியில் அமைந்துள்ள கலாநிதி மனோகரக்குருக்கள் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இடபக்கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பஞ்சபுராணம், கவிதைகள், நடனங்கள் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன. சமய சமூக பணிகளுக்காக வழங்கப்படும் கலாநிதி மனோகரக்குருக்கள் விருது 2014 திரு செல்வரட்ணம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் போட்டிகளில் வெற்றிபெற்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்வருட நினைவுப்பேருரையினை தென் புலோலியூர் பரா ரதீஸ் அவர்களால் வழங்கபட்டது.
கலாநிதி மனோகரக்குருக்களின் 2ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் - 2014- படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 30, 2014
Rating:
No comments:
Post a Comment