பதில் வலயக்கல்விப் பணிபாளர் நியமனம்
முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்திற்கு பதில் வலயக்கல்விப் பணிபாளராக மாலினி வெலிங்டன் வடமாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிப்பாளராக இருந்த எம்.ராஜ்குமார் நிதிமோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பனவற்றில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் மேலதிக விசாரணைகளுக்காக அவர் வடமாகாண கல்வி திணைக்களத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்திற்கு நிரந்தர வலயக்கல்விப் பணிப்பாளர் ஒருவரை நியமிக்கும் வரை துணுக்காய் வலயக் கல்விப்பணிப்பாளர் பதில் வலயக் கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் வலயக்கல்விப் பணிபாளர் நியமனம்
Reviewed by NEWMANNAR
on
March 25, 2014
Rating:

No comments:
Post a Comment