திருக்கேதீஸ்வரம் புதைகுழியில் வரைப்படம் வரையும் பணி
கடந்த ஆறு தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தமன்னார் புதைகுழி அகழ்வுப் பணி இன்று திங்கள் கிழமைமீண்டும் ஆரம்பிக்கப் பட்டிருந்தபோதும் புதைக் குழி அகழ்வு இடம்பெறவில்லை. மாறாகவரைப்படம் வரையும் பணிமட்டுமே இடம்பெற்றது.
மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் கடந்தடிசம்பர் மாதம் 20 ந் திகதி கண்டுபிடிக்கப்பட்ட மனிதபுதை குழி இன்று 32 வது நாட்களாக அகழ்வுப் பணி சம்பந்தமான பணிகள் இடம்பெற்றது.
கடந்தமாதம் 24 ந் திகதிவரை 31 வது தடவையாக நடைபெற்ற இவ் புதை குழி அகழ்வுப் பணியில் 80 மண்டையோடுகளும் அதன் எலும்புக் கூடுகளும் கண்டுப்பிடிக்கப்பட்டு அவைகள் குழியிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் பகுப்பாயிவுக்கு கொண்டு செல்லும் முகமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில்
சிவராத்திரிதினத்தை முன்னிட்டு இவ் மனித புதை குழி அகழ்வுப் பணிகடந்த ஆறு தினங்களாக இடைநிறுத்தப் பட்டிருந்தன. பின் மீண்டும் இன்று மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் காலை 8.30 மணி தொடக்கம் 11.45 வரை இப் புதைகுழியில் பணியொன்று இடம்பெற்றது.
இன்று இடம்பெற்றபணியின்போது அனுராதபுரத்திலிருந்துவருகைதரும் சட்டவைத்திய நிபுணர்கள் குழு பணிக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் புதைகுழி அகழிவு இன்று இடம்பெறவில்லை.
மாறாகதொல்பொருள் ஆராச்சி அதிகாரிகள் இவ் பணிக்கு இன்று சமூகமளித்து இக் குழியை தொடர்ந்து அகழ்வு செய்யும் நோக்குடன் வரைபடம் வரையும் பணிகள் மட்டும் இடம்பெற்றன.
இவ் மனிதபுதை குழி தொடர்ந்து இடம்பெற இருக்கின்றபோதும் நாளை செவ்வாய் கிழமை நடைபெறமாட்டாது என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் எதிர்வரும் புதன் கிழமை இவ் மனித புதை குழி அகழ்வுப் பணி மீண்டும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்கட்டது.

Reviewed by Author
on
March 03, 2014
Rating:

No comments:
Post a Comment