அண்மைய செய்திகள்

recent
-

பேசாலையில் போதைபொருளுடன் இருவர் கைது

தலைமன்னார் பொலிசாருக்கு கிடைக்கப்பபெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து முச்சக்கரவணடி ஒன்றை சோதனையிட்டப்போது போதை பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இது சம்பந்தமாக பேசாலை பகுதியியை சேர்ந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிசாரால் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்



இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 02.03.2014 அன்று பேசாலை பகுதியிலிடம்பெற்றுள்ளது

இது பற்றி தெரியவருவதாவது
பேசாலை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் போதைவஸ்த்து கடத்தப்படுவதாக தலைமன்னார் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த தலைமன்னார் பொலிசார் பேசாலை பகுதியில் குறித்த முச்சக்கர வண்டியை இடை மறித்து  சோதனையிட்டப்போது அவ் முச்சக்கர வண்டியிலிருந்த இருவர் தங்களுடன் போதைவஸ்த்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
இதில் ஒருவர் போசாலை எட்டாம் வட்டாரத்தை சேர்ந்தவர் என்றும் இவரிடமிருந்து 13 கிராம் 600 மில்லிகிராம் கரேயின் போதைபொருள் வைத்திருந்ததாகவும் மற்றவர் பேசாலை முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் எனவும் இவரிடமிருந்து 210 மில்லிகிராம் போதைபொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தலைமன்னார் பொலிசார் தெரிவித்தனர்

இவர்களை மன்னார் நீதிபதி முன் முன்நிலைபடுத்துவதற்கு நடவடிக்கைகளை தலைமன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேசாலையில் போதைபொருளுடன் இருவர் கைது Reviewed by Author on March 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.