மன்னார் நகரசபையின் அனுசரனையுடன் அனர்த்தங்களை தாக்குபிடிப்பதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுப்பு -படங்கள்
மன்னார் நகரசபைக்குட்பட்ட பகுதியில் சிறிய அளவிலான அனர்த்த அபாய செயற்பாடுகளுக்கான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது
குறித்த செயற்பாடு மன்னார் நகரசபையின் முதல்வர் எஸ்.ஞானபிரகாசம் அவர்களின் வேண்டுகோள்களுக்கு அமைவாக மன்னார் நகரசபையின் அனுசரனையுடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஜக்கிய நாடுகள் வாழ்வக ஸ்தாபனத்தினால் (UN-HABITAT) குறித்த Nலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இலங்கை நகரங்கள் அனர்த்தங்களை தாக்குபிடிப்பதற்கான அபிவிருத்தி உபாயங்கள் என்ற கருத்திட்டத்தின் கீழ் பின்வரும் சிறிய அளவிலான அனர்த்த அபாயநிலை குறைப்பு செயற்பாடுகள் மன்னார் நகர சபை பிரதேசத்தில் நடைபெறுகின்றன.
இதன் அடிப்படையில்

உப்பக்குளம் மனோகரகுருக்கள் வீதி புனரமைப்பிற்கென ரூபா.60,000.00 ரூபாவும்
பள்ளிமுனை 50 வீட்டுத்திட்ட வீதி புனரமைப்பு ரூபா.60,000.00
எமில் நகரில் கல்வெட்டு அமைத்தலுக்கு ரூபா.30,000.00
செலவிடப்பட்டள்ளது என மன்னார் நகரசபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
செலவிடப்பட்டள்ளது என மன்னார் நகரசபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
மன்னார் நகரசபையின் அனுசரனையுடன் அனர்த்தங்களை தாக்குபிடிப்பதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுப்பு -படங்கள்
Reviewed by Author
on
March 13, 2014
Rating:

No comments:
Post a Comment