அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பரீட்சார்த்த உருளைகிழங்கு செய்கை வெற்றியளித்துள்ளது-படங்கள்

வயல் விழா நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை மன்னாரில் நடைபெற்றது. மன்னார் மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக பரீட்சார்த்தமாக உருளைக்கிழங்கு செய்கை மன்னார் தரவான்கோட்டையில் செய்கை பண்ணப்பட்டு வந்தது.

இந்நிலையில் இதனை ஒட்டி வயல் விழா நேற்று காலை 9 மணியளவில் மன்னார் தரவான்கோட்டையில்; நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார், மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அற்புதச்சந்திரன், யு.என்.டி.பி திட்ட இணைப்பாளர் , விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் உட்;பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் தற்போதைய காலபோகம் உருளைக்கிழங்கு பயிர்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரைகாலமும் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே குறித்த உருளைக்கிழங்கு பயிர் செய்கை செய்யப்பட்டு வந்தது.
இன்நிலையில் மன்னார் மாவட்டத்தில் பரீட்சார்த்த முறையிலான உருளைக்கிழங்கு செய்கை செய்யப்பட்டுவந்தது.
இதன்படி பரீட்சார்த்த முறையில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் முன்;;மாதிரி துண்டங்கள் இரண்டு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முன்மாதிரி துண்டங்களுக்காக லெசோடா, அனோபா போன்ற இரண்டு வகையான உருளைக்கிழங்கு வகைகள் வழங்கப்பட்டு பரீட்சார்த்தமாக விவசாயிகளின் பயிர் செய்கை நிலங்களில் பரீட்ச்சிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் தற்பொழுது நடைபெற்று வரும் பெரும்போகத்தில் உருளைக்கிழங்கு செய்கை அதிக அளவு பலனை தந்துள்ளது.
இதனை அடுத்து இனிவரும் காலங்களில் மன்னார் மாவட்டத்தில் உருளைகிழங்கு செய்கையினை வெற்றிகரமாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவ் உருளைக்கிழங்கு செய்கையின் பிரதான நோக்கம் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் அளவை கட்டுப்படுத்தவும் , ஊள்ளுர்உற்பத்தியின் மூலம் உருளைக்கிழங்கு செய்கையினை விவசாயிகள் மத்தியில் ஊக்குவித்து விவசாயிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் அன்னியசெலாவணியை மீதப்படுத்துவதாகும்
இதன் அடிப்படையில் அரசாங்கம் இத் இத்திட்டத்தை செயற்படுத்தி வருகிறது
இத் திட்டத்திற்கு அமைவாக விவசாய திணைக்களம் குறித்த பயிர் செய்கைக்கான தொழில்நுட்ப உதவிகளை விவசாயிகளுக்கு வழங்கிவருகிறது.

இனிவரும் காலங்களில் மன்னார் மாவட்டத்தில் பல பாகங்களிலும்; குறித்த உருளைக்கிழங்கு செய்கையினை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

















மன்னாரில் பரீட்சார்த்த உருளைகிழங்கு செய்கை வெற்றியளித்துள்ளது-படங்கள் Reviewed by Author on March 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.