மனித உரிமை ஆணைக்குழு நாளை ஜெனீவா பயணம்
பொதுநலவாய நாடுகளின் அழைப்பையேற்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினர் நாளைமறு தினம் 9ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை ஜெனீவா பயணமாகவுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறையொன்று 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஜெனீவாவிவ் நடைபெறவுள்ளது. பொதுநலவாய நாடுகளிலிருந்து இப்பட்டறைக்கு பங்கு பற்றுநர்கள் வருகை தரவுள்ளனர்.
இலங்கையிலிருந்து செல்லும் குழுவினர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கலந்துகொள்வார்கள்.
மனித உரிமை ஆணைக்குழு தவிசாளர் பிரியந்த பெரேரா தலைமையிலான குழுவில் 10 பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர்.
வடக்கு மாகாணத்திலிருந்து ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜாவும், கிழக்கு மாகாணத்திலிருந்து கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப்பும் கலந்துகொள்கின்றனர். ஏனைய எண்மரும் தலைமையகம் சார்பில் கலந்துகொள்ளும் அதிகாரிகளாவர்.
மனித உரிமை ஆணைக்குழு நாளை ஜெனீவா பயணம்
Reviewed by NEWMANNAR
on
March 08, 2014
Rating:

No comments:
Post a Comment