75 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து
நீர்கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி சென்ற லொறி ஒன்று கொழும்பு - அட்டன் பிரதான வீதியில் வட்டவளை பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தில் நடத்துனர் படுங்காயத்துக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின் மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு சாரதிக்கு பெரும் பாதிப்பு இல்லை எனவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
75 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து
Reviewed by NEWMANNAR
on
April 08, 2014
Rating:

No comments:
Post a Comment