மன்னார் தள்ளாடி இராணுவ முகாமருகில் உள்ள பிள்ளையார் சிலை உடைப்பு,வன்மையாக கண்டிக்கின்றார் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் - படங்கள்
மன்னார் தள்ளாடி இராணுவ முகாம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை உடைத்து சேதமாக்கப்பட்டது அறியப்பட்டது. தகவலினை தொடர்ந்து வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சேதங்களை நேரில் பார்வையிட்டார்
அதன் போது ஆலய குருக்கள் மற்றும் இந்து மகாசபை உறுப்பினர்கள் ஆகியோர் சமூகமளித்திருந்தனர் குறித்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் தமிழ்பேசும் எமது உறவுகளுக்குள் உள்ள ஒற்றுமையை குழப்பும் விதமாக மதங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்ப்படுத்தும் வண்ணம் சில விசமிகள் செயற்படுவது இதனூடாக புலப்படுகின்றது என்றும் இதனை மக்கள் புரிந்து விழிப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், இவ்வாறு மதங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்ப்படுத்துவது தொடருமேயானால் ஐந்து அல்ல பத்து ஆண்டுகள் சென்றாலும் அபிவிருத்திகள் என்பதை விடுத்து வெறுமனே இவ்வாறான பிரச்சனைகளை தீர்ப்பதிலேயே காலம் செல்லும் என்றும் இதனை எனது தமிழ் பேசும் மக்களே புத்தி சாதூர்யமாக அறிந்து விழிப்பாக இருக்கவேண்டியது அவசியம் எனவும். எனவே இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அடையாளங்காணப்படுமிடத்து அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்....
மன்னார் தள்ளாடி இராணுவ முகாமருகில் உள்ள பிள்ளையார் சிலை உடைப்பு,வன்மையாக கண்டிக்கின்றார் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
April 08, 2014
Rating:

No comments:
Post a Comment