ஊழலுக்கெதிராக அறிவூட்டும் செயலமர்வு
URL (Union For Right to Law) அமைப்பினர் Transparency International Sri Lanka வுடன் இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (06-04-2014) யாழ் திருநெல்வேலி YMHA மண்டபத்தில் ஊழலுக்கெதிராக அறிவூட்டும் செயலமர்வு ஒன்றை நடாத்துகின்றனர் .
நேரம் காலை 09.30 முதல் பிற்பகல் 01.30 மணிவரை.
இது இன்றைய காலத்தின் தேவை என்பது யாரும் மறுதலிக்க முடியாதது. ஏனெனில் இலஞ்ச ஊழலின் தாக்கத்தை எம்மவரிடையே இன்று கண்கூடாக அறிய முடிகின்ற துரதுஸ்டம் எம்மிடையே பரவியுள்ளது. எனவே இலஞ்ச ஊழல் தொடர்பான சட்ட விழிப்புணர்வூட்டல் காலத்தின் கட்டாயும் என்பதுடன் சமூக ஆர்வலர்களின் கடமையும் ஆகும். URL அமைப்பு ஆனது மக்கள் அனைவருக்கும் சட்டஅறிவும் சட்டஅணுகலும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும் என கருதி கருமமாற்றும் ஓர் அமைப்பாகும்.
இவ்செயலமர்வில் அனுபமுள்ள சட்டவியலாளர்கள் வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளார்கள். இச்செயலமலர்வானது தகவல் அறியும் உரிமைச்சட்டம் (Right to Information) , இலஞ்ச ஊழலுக்கு எதிரான சட்டங்கள் (Anti-Corruption Laws) மற்றும் சமூக வலைத்தளங்கட்கு (Social Media) ஏற்புடையதாகும் சட்டங்கள் குறித்து எளிமையான விளக்கவுரைகளையும் குழு வேலைத்திட்டங்களையும் உள்ளடக்கியதாக காணப்படும்.
மொழி மூலம் தமிழ்,
பங்கு பெறுணர்கட்கு தேவையான உபகரணங்கள் சிற்றுண்டி, மதிய போசனம் மற்றும் பங்கு பெற்றல் சான்றிதழ் வழங்கப்படும்.
பங்குபற்றுணர்களின் எண்ணிக்கை மட்டுப் படுத்தப்பட்டுள்ளதால் ஆர்வமுள்ள அனைவரையும் உடன் விண்ணப்பிக்க அழைக்கின்றோம். கலந்து கொள்வததை உறுதிப்படுத்த கீழ் கொடுக்கப்பட்டுள்ள எளிய விண்ணப்படிவத்தை பூரணப்படுத்தி எமக்கு அனுப்புங்கள். தங்கள் பங்கு பற்றல் எம்மால் மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும். மேலதிக விசாரணைகட்கு arjunwil@yahoo.com எனும் மின்னஞ்சலை பயன்படுத்துங்கள்.
விண்ணப்ப முகவரி
https://docs.google.com/forms/d/12wRuqecy3IY8ydSb72ipHVfUw70FWUF86DEOTjIf0lU/viewform
ஊழலுக்கெதிராக அறிவூட்டும் செயலமர்வு
Reviewed by NEWMANNAR
on
April 03, 2014
Rating:

No comments:
Post a Comment