ஒய்வுபெறும் கடிதத்தினை சமர்பித்தார் மஹேல ஜயவர்தன
இருபதுக்கு-20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் இன்று கையளித்துள்ளார்.
போட்டிகளில் இருந்து மஹேல ஜயவர்தன ஒய்வு பெறுவது தொடர்பான கடிதம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குமார் சங்கக்கார ஒய்வு பெறுவது தொடர்பான கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஒய்வுபெறும் கடிதத்தினை சமர்பித்தார் மஹேல ஜயவர்தன
Reviewed by NEWMANNAR
on
April 10, 2014
Rating:

No comments:
Post a Comment