மன்னாரில் இருந்து பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலயம் நோக்கி பாத யாத்திரை
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்கள் இன்று வியாழக்கிழமை காலை பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலயம் நோக்கி பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
மன்னார் மறைமாவட்டம் பேசாலை பங்கினைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவ்வாறு பாத யாத்திரையாக சென்றுள்ளனர்.
பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலயத்திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(11) கொண்டாடப்படவுள்ள நிலையில் குறித்த ஆலயம் நோக்கி இன்று(10) மன்னார் பேசாலை மக்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் பேசாலை வெற்றி மாதா ஆலயத்தில் இருந்து தமது யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் இன்று மாலை பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலயத்தைச் சென்றடையும் நிலையில் இன்று(10) மாலை இடம் பெறும் திருச்சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை ஆகியவற்றில் கலந்து கொள்ளுவதோடு நாளை வெள்ளிக்கிழமை(11) காலை 7.30 மணியிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் ஒப்புககொடுக்கப்படும் திருநாள் திருப்பலியிலும் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இருந்து பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலயம் நோக்கி பாத யாத்திரை
Reviewed by NEWMANNAR
on
April 10, 2014
Rating:

No comments:
Post a Comment