அண்மைய செய்திகள்

recent
-

குமரிக்கு ரயில் வந்து 35 ஆண்டுகள் முடிந்து விட்டது. கோட்டம் மாறினால் விடிவுகாலம் பிறக்குமா?

குமரிக்கு ரயில் வந்து 35 ஆண்டுகள் முடிந்து விட்டது.

ரயில்வே வளர்ச்சி திட்டங்களில்; கேரளாவை விட 20 வருடம் பின்னோக்கியே உள்ளது. கோட்டம் மாறினால் விடிவுகாலம் பிறக்குமா?
            
           பழமை வாய்ந்த மன்னர் நாடான திருவிதாங்கூரின் தமிழ் மொழி பேசும் நான்கு தென்தாலுகாக்களை இணைத்து கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவாக்கி 1956–ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாளன்று பிரித்து தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டாலும் இன்னும் சில காரியங்களில் குமரி மாவட்ட மக்கள் கேரளா ஆதிக்கத்திலிருந்து விடுபடவில்லை. அவைகளில் முக்கியமானது, குமரி மாவட்ட ரயில் சேவை நிர்வாகம். இது கேரளாவில் உள்ள  திருவனந்தபுரம் கோட்டத்தின் ஆதிக்கத்தில் இருப்பதால் குமரிமாவட்ட மக்கள் பல்வேறு வழிகளில் புறக்கணிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களில் போதிய வசதிகள் செய்து தரப்பட வில்லை. 

ஆனால் இங்குள்ள நிலையங்கள் ஈட்டித்தரும் வருமானம் வானளாவி நிற்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் குமரி மாவட்டம் கேரளத்திலிருந்து  பிரிந்துவிட்டதை பொறுக்க முடியாமல் கடும் வைராக்கியத்துடன் பல்வேறு வழிகளில்; குமரி மாவட்ட மக்களை பழிவாங்குகின்றனர் கேரளாவை சார்ந்த அதிகாரிகள். இது கேரளாவின் ஆதிக்கத்தில் இருப்பதால் குமரிமாவட்ட மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். 

  ரயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் முக்கியத்துவத்தைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் முழுக்க உணரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும். ஒன்று, தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ் வசதி இருப்பதால் இதுவே போதும் என்கிற திருப்தி அல்லது பஸ் முதலாளிகளாகவும் இருந்த அந்நாளைய அரசியல் பிரமுகர்கள் பலர், ரயில் போக்குவரத்தைத் தங்களுடைய தொழிலுக்குப் போட்டியாளராகக் கருதி, அது வளராமல் இருந்தால்தான் நமக்கு நல்லது என்று நினைத்து அதைப் பற்றி அக்கறை காட்டாமல் இருந்திருக்கலாம். 

ரயிலைப் பயன்படுத்துவோர் ஏன் குறைவு என்று எந்த மார்க்கத்திலும் யாரும் சர்வே எடுப்பதில்லை. ரயில் நிலையங்களுக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதி, பகல் நேரங்களில் ரயில் பயண சேவை, ரயில் நிலையங்களில் பாதுகாப்பான சூழல் போன்றவை இருந்தால் ரயில்களைப் பயன்படுத்துவதற்குப் பயணிகளுக்குத் தயக்கம் இருக்காது. இப்போதும்கூட ரயில் போக்குவரத்துக்கும் பஸ் போக்குவரத்துக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. பல ஊர்களில் ரயில் நிலையங்களுக்கும் பஸ் நிலையங்களுக்கும் அடிக்கடி சென்றுவரும் 'டவுன்-பஸ்' இணைப்புகூட கிடையாது. அதேவேளையில் கேரளத்தில் விழிப்புணர்வு உள்ள அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் கேரளத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளன. 

1956 இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றிடம் தமிழகத்தின் எல்லைகளை இழந்து விட்டோம் என்கிற குமுறல் தமிழக மக்களிடையே உள்ளது. இப்போது தென்னகத் தொடர் வண்டித் துறை என்பதன் பெயரால், தமிழகத்தொடர்வண்டி இருப்புப்பாதைகளை அண்டை மாநிலங்களின் கோட்டங்களில் இணைத்திருக்கிறார்கள். எனவே முதலாவதாக இவற்றை மீட்டெடுத்து தமிழகத்தின் கோட்டங்களில் இணைக்கவேண்டும் என்று தமிழக மக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது. 

வெறும் 20 எம்பிக்கள் இருந்தாலும் கட்சி வேறுபாடு இல்லாமல் டெல்லியில் நெருக்கடி தந்து தங்களுக்குவேண்டியதை சாதித்துக் கொள்வதில் கில்லாடிகள் கேரள அரசியல்வாதிகள். பல ஆண்டுகளாக ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்தது. இதனால் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட பல ரயில்களைக் கூட மலையாளிகள் தட்டிப் பறித்தனர். தென்னக ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு, பெங்களூர், மைசூர் கோட்டங்கள் இருந்தன. இதில் இருந்து பெங்களுர், மைசூர் கோட்டங்களை 2003-ம் ஆண்டு தென்மேற்கு ரயில்வே உருவானபோது அதனுடன் இணைத்துக்கொண்டனர்.

 திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் 02-10-1979-ல் நிறுவப்பட்டது. இக்கோட்டத்தில் இணைக்கப்ட்டுள்ள கேரளாவில் உள்ள ரயில்பாதைகள் முன்பு பாலக்காடு மற்றும் மதுரை கோட்டத்தில் இயங்கிவந்தது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் இன்று வருகின்ற கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட ரயில்பாதைகள் தொடர்ந்து ரயில்வே துறையால் புறக்கணித்து வருகிறது. 

இக்கோட்டத்தின் கீழ் வருகின்ற கேரள மாநிலப் பகுதிகளில் ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு அக்கறையும், முன்னுரிமையும்  எடுத்துகொள்கின்ற மலையாள ரயில்வே அதிகாரிகள் குமரி மற்றும் நெல்லை மாவட்டப் பயணிகள் நலனை புறந்தள்ளுவது தொடர் கதையகிவிட்டது. குமரி மாவட்டத்துக்கு புதிய ரயில்களை இயக்கவும், இங்குள்ள ரயில் வசதிகளைப் பெருக்கவும் ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் பல ஆண்டுகளாக புறந்தள்ளப்;பட்டுவருகின்றன. நமது அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும், பிறதலைவர்களும் இதுகுறித்து கண்டுகொள்வதுமில்லை, கவலைப்படுவதுமில்லை. ஏனெனில் ரயில் பயணம் என்பது அவர்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் சாதாரணப் பொதுமக்களுக்கு இது ஒரு அனுதினப்பிரச்சனையாகும்.

       நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக முக்கிய ஒரு ரயில் நிலையம் ஆகும.; இந்த நிலையம் மூன்று ரயில் இருப்புபாதை வழித்தடங்கள் சந்திக்கும் ஓர் சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். ஒரு தடம் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் ரயில் நிலையம் வந்து  பிறகு இரண்டாக பிரிந்து ஒன்று திருவனந்தபுரம், எர்ணாகுளம், மங்களுர், கோவா வழியாக மும்பை மார்க்கம் பயணிக்கிறது. மற்றமார்க்கம் திருநெல்வேலி, மதுரை, சென்னை வழியாக பிற மாநிலங்களுக்கு பயணிக்கிறது. ஆகையால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் பயணத்துக்காகப்பயணிகள் அலைமோதுகின்ற நிலையமாகவே காணப்படுகிறது. 

குமரிக்கு ரயில் வந்தது எப்படி:-
       சென்னை மாகாணா ஆங்கிலேய அரசின் காலகட்டத்தில் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கும், மணியாச்சியிலிருந்து திருநெல்வேலிக்கும் புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைத்து 01-01-1876 அன்று முதல் பயணிகளின் பயன்பாட்டுக்காக ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் திருநெல்வேலிக்கு தென்பகுதியல் உள்ள எந்த ஒரு பகுதிக்கும் ரயில் வசதி கிடையாது. திருவாங்கூர் சமஸ்தானத்து உட்பட்ட தற்போதைய கன்னியாகுமரி மாவட்ட மக்கள் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் திருநெல்வேலிக்கு சென்றுதான் ரயிலில் பயணிக்க வேண்டியிருந்தது. 

       இந்த நிலையில் அன்னாளைய சென்னை மாகாண ஆங்கில அரசு இரண்டு அரசுகளின் வணிக நலன்களை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காகவும் 1873-ஆம் ஆண்டு தென்பகுதியில் உள்ள திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு சென்னையிலிருந்து ரயில் இணைப்புகள் மிகவும் தேவையானது என்று உணர்ந்து திட்டமிட்டது. இதற்காக சென்னை மாகாணம் தென்இந்திய ரயில்வே நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தது. அப்போது திருவிதாங்கூர் திவானாக இருந்த ராமங்கஐயர் திருவாங்கூர்  அரசின் எதிர்பார்ப்பாக 13  ஆகஸ்டு 1883 அன்று இது பற்றி தென்இந்திய ரயில்வே அதிகாரிகளும் திருவிதாங்கூர் அரசும் விவாதித்தது. இந்த விவாதத்தில் திருநெல்வேலியையும் திருவனந்தபுரத்தையும் ரயில் மூலமாக இணைப்பது பற்றி இரண்டு வழிதடங்கள் பற்றி இணைப்பது பற்றி விவாதிக்கப்ட்டது. 

அதன்பிறகு இதற்காக தென்இந்திய ரயில்வே நிறுவன முதன்மை பொறியாளர் திரு பர்டன் தலைமையில் குழு ஒன்றை ஆங்கிலேயே அரசு அமைத்தது. இந்த குழு, முதலில் திருநெல்வேலியிருந்து செங்கோட்டை, சிற்றார் மலை தாழ்வாரம் வழியாக திருவனந்தபுரத்துக்கும் பின்னர் திருவனந்தபுரத்திலிருந்து கொல்லத்துக்கும் ரயில் பாதை அமைத்து திருவாங்கூரையும் சென்னை மாகணத்தையும் இணைக்கலாம் என்று ஆய்ந்து பரிந்துரை செய்தது.  பிறகு தென்இந்திய ரயில்வே நிறுவனம்  தென்பகுதி மக்கள் அனைவரும் பயன்பெறும் நோக்கத்தில் திருநெல்வேலி, ஆரால்வாய்மொழி வழியாக திருவனந்தபுரத்தை சென்னை மாகாணத்துடன் இணைக்கலாம் என்றும் அதற்கு பிறகு திருவனந்தபுரத்திலிருந்து கொல்லத்துக்கு ரயில் இணைப்பை நீட்டிப்'பு செய்யலாம் என்றும் ஆய்ந்து இரண்டாவதாக ஒரு வழித்தடத்தையும் பரிந்துரை செய்தது. 

             இந்நிலையில் வடக்கு வழிபாதையாக திருநெல்வேலியிருந்து செங்கோட்டை, ஆரியங்காவு வழியாக கொல்லத்துக்கு ஒர் ரயில் இணைப்பு உருவாக்குவதற்காக திருவிதாங்கூர் திவான் முன்கையெடுத்து செயல்புரிந்தார். கோவில்பட்;டியிலிருந்து செங்கோட்டை மார்க்கம் கொல்லத்தை இணைக்கும் ரயில்பாதை இலாபகரமானது என்று ஆங்கில அரசுக்கு தெரிவித்து அந்த வழிதடத்துக்கு அதிக ஆர்வம் காட்டினார். இதனால் 1881-ம் ஆண்டு இறுதியில்  தென்இந்திய ரயில்வே நிறுவன அலோசனைப் பொறியாளர் லோகன்  திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரத்துக்கு, கொல்லம் செங்கோட்டை வழியில் ரயில் விடுவதற்கான பரிந்துரையை சமர்பித்தார். 

1882-ம் ஆண்டு இரண்டு வழி தடங்களிலும் உருவாகின்ற இலாப நஷ்டங்களை ஒப்பாய்வு செய்து அவர் அறிக்கையை சமர்பித்தார். அவ்வறிக்கையில்; தென்பகுதி மக்கள் அதிகம் பயன்படும் விதமாக அவர் தென்பகுதி தடத்தை பரிந்துரை செய்தார். ஆனால் திருவிதாங்கூர் திவான் வடவழிபாதையை அதாவது செங்கோட்டை வழித்தடத்தை ஆதரித்தார். ஏனெனில் திருவனந்தபுரத்தைவிட கொல்லம் பெரும் வணிக மையமாக இருந்ததால் அந்த வழித்தடம் இலாபகரமானதாக இருக்கும் என்று முடிவு செய்து பரிந்துரைத்தார்.  இதனடிப்படையில்  வடவழிபாதையை ஏற்றுக்கொண்ட தென்இந்திய ரயில்வே நிறுவன அதிகாரிகள் திருநெல்வேலியிருந்து செங்கோட்டை, ஆரியங்காவு வழியாக கொல்லம் வரை ரயில் வழிதடம் அமைக்கத் தொடங்கியது. 

            அதன்பிறகு  ஆங்கில அரசு, கொல்லம் - திருவனந்தபுரம் ரயில பாதையை நீட்டிப்புச் செய்திட அனுமதித்தது.  திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு முதல் ரயில,; கொல்லம் - புனலூர் வழியாக நவம்பர் 26, 1904-ம் ஆண்டு இயக்கப்பட்டது. கொல்லம் - திருவனந்தபுரம் ரயில் பாதை 1913-ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு 1917-ம் ஆண்டு முடிக்கப்ட்டது. 1918-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வர்த்தக முறையில் பயணிகள் போக்குவரத்துக்காக திறந்துவிடப்படட்டது. தொடக்கத்தில் திருவனந்தபுரம் ரயில் நிலையம் நகரத்தின் வெளியே சாலை என்ற இடத்தில் தான் இயங்கிவந்தது. 1926-ம் ஆண்டு இந்த வழித்தடம் மேலும் திருவனந்தபுரம் நகரின் மையபகுதிக்கு நீட்டிப்பு செய்வதற்கான பணிகள் தொடங்கப்ட்டன. 

அப்போதைய திவான் வாட்ஸ,; திருவனந்தபுரம் ரயில்நிலையத்தை நகரத்தின் உள்ளே கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி எடுத்துக் கொண்டதின் பயனாக நவம்பர் 04 -1931-ம் ஆண்டு திருவனந்தபுரம் மத்தியில் தம்பானூரில் ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த சூழ்நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு பாதையை விரிவுப்படுத்துவதற்கு எந்தவொரு திட்டமோ அல்லது அறிக்கையோ அரசிடம் இருக்கவில்லை. இது குறித்து யாருமே திவானிடம் கோரிக்கை அல்லது மற்றும் கருத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால் 1928-ல் ரயில்பாதையை நாகர்கோவில் வரை நீட்டிக்க கோரி ஓர் விண்ணப்பம் தரப்பட்டது. இதனை சமர்பித்தவர் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சார்ந்த திரு டி. பிறான்சீஸ் அவர்கள் ஆவார். இவர்தான் நாகர்கோவிலுக்கு ரயில் வசதி வேண்டும் என்று கோரிய முதல் பெருந்தகையாவர் ஆவார்.

     ராமன்புதூரை சார்ந்த திரு டி. பிறான்சீஸ் அவர்களை 1908-ம் ஆண்டு திருவிதாங்கூர்; திவான் திரு இராசகோபாலாச்சாரியார் ஸ்ரீமுலம் பாப்புலர் சட்டமன்ற உறுப்பினராக நியமித்தார்.  1927-28 –ஆம் ஆண்டுகளில் நடந்த 17 மற்றும் 24-வது ஸ்ரீமுலம் சட்டமன்றக் கூட்டத்தொடரில், கொல்லம் முதல் திருவனந்தபுரம் வரையில் உள்ள ரயில்பாதையை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அன்னாரது வேண்டுகொளை அரசு ஏற்றுக்கொண்டு, திட்டத்தை ஆய்வு செய்தது. 01-03-1928 அன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் திருவிதாங்கூர் திவான்; திரு பிறான்சீடம் திருவனந்தபுரம் -நாகர்கோவில் ரயில் பாதை ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றும்  ஆனால் கட்டுமானப் பணியைத் தொடங்குவது கேள்விக்குறியாக உள்ளது என்றம் தெரிவிக்கப்ட்டது. 

ஏனெனில் சாக்கை – தம்பானூர் ரயில் பாதை பணியில் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளதால் திட்டம் நிலுவையில் வைக்கப்ட்டது. ஆயினும் சாக்கையிலிருந்து தொடங்குகின்ற இப்பணியே தெற்கு நோக்கி ரயில் பாதை விரிவடைவதற்கான முதற்படியாகும் என்றும் விளக்கம் கூறப்பட்டது. இவ்வாறு குமரிக்கு ரயில் வேண்டும் என்று குரல் கொடுத்த முதல் சான்றோன் திரு. பிறான்சிஸ் ஆவார்.  அவருக்குப்பிறகு குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்கள் பாராளுமன்றத்தில்; இதற்காகக் குரல் கொடுத்தார். 

           இதன்பயனாக 1956-57-ம் ஆண்டு  ரயில்வே பட்ஜெட்டில் திருவனந்தபுரம் -திருநெல்வேலி –கன்னியாகுமரி ரயில் பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுப் பணிக்கு அனுமதிக்கப்ட்டது. அன்று ரயில்வே அமைச்சராக இருந்த லால்பகதூர்சாஸ்திரி அவர்கள் 23 பெப்ரவரி 1956ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இந்த திட்டத்தை அறிவித்தார். அந்த ஆண்டில் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினராக குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்கள் இருந்தார். இந்த ஆய்வு, 1965-ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த எஸ்.கே பட்டில் அவர்கள் 1965-ம் ஆண்டு பெப்ரவரி 18-ம் தேதி பாராளுமன்றத்தில் ஆய்வு நிறைவு பெற்றதாக  அறிவித்தார். 

      கன்னியாகுமரி – நாகர்கோவில் - திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில்பாதைக்கள் மொத்தம் 164.02 கி.மீ அமைக்க 1972-73-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில், 14.53 கோடிகள் திட்டத்தில்  அறிவிக்கப்பட்டது. 1972-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் ஹனுமந்தையா அவர்களால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.  இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக திருவனந்தபுரம் - நாகர்கோவில் -கன்னியாகுமரி திட்டமும், இரண்டாம் கட்டமாக நாகர்கோவில் -திருநெல்வேலி ரயில் பாதையையும் செயல்படுத்தப்படும் என்று முடிவுசெய்யப்பட்டது. 

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட அதே ஆண்டில் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினராக காமராஜர் இருந்தார். இந்த பட்ஜெட்டில் தான் திருநெல்வேலி –மணியாச்சி மற்றும் தூத்துகுடி – மதுரை மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில்பாதையாக மாற்றவும் அறிவிக்கப்ட்டது. இதைத் தொடர்ந்து அப்போதைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி 1972-ம் ஆண்டு செட்டம்பர் மாதம் 6-ம் தேதி கன்னியாகுமரியில் இதற்கான அடிக்கல் நாட்டினார். இந்த ரயில் பாதையில் மொத்தம் 24 ரயில் நிலையங்களும் இதில் 7 கிராசிங் ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டன. இந்த திட்டத்துக்கு மொத்தம் 567 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.  இந்த வழிதடத்தில் 16 பெரிய பாலங்களும் 405 சிறிய பாலங்களும், 29 மேம்பாலங்களும், 12 கீழ்பாலங்களும் அமைக்கப்பட்டன.

பிரதமர் இந்திராகாந்தி

          காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இரயில் மூலம் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக இந்த ரயில் பாதை விளங்கும் என்று, திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ரயில் பாதை அமைக்கும் பணியைப் பிரதமர் இந்திராகாந்தி தொடக்கி வைத்துப் பேசினார். இந்த விழாவிற்குத் தமிழக முதல்அமைச்சர் கருணாநிதி கேரளா முதலைமைச்சர் அச்சுதமேனன், மத்திய ரயில்வே அமைச்சர் பாய் போன்றோர் கலந்து கொண்டனர். இந்திராகாந்தியின் அவசரகால தடா சட்டத்துக்கு காமராஜர் எதிராக இருந்தமையால் அவருக்கு நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் கூட விழாவுக்கு மலையாளிகளால் அழைப்பிதழ் வைக்கப்படவில்லை. ஆயினும் காமராஜர் இந்த விழாவில் மக்களோடு மக்களாக பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து கலந்து கொண்டார். இதை கவனித்த பிரதமர் இந்திராகாந்தி, காமராஜரை மேடைக்கு அழைத்து உட்காரவைத்து கவுரவித்தார். இந்த நிகழ்வு மூலம் 1972-ம் ஆண்டிலிருந்தே ரயில்வேயின் மலையாளி அதிகாரிகளால் கன்னியாகுமரி மாவட்டம்  ரயில்வே மேம்பாடு முற்றிலும புறக்கணிக்கப்ட்டு வருகிறது என்பதைத் காணமுடிகிறது.  

           ரயில்வே உதவி மந்திரி குரோஷி இந்த ரயில் பாதையின் முக்கியத்துவத்தை விளக்கினார். பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருக்கு கன்னியாகுரிக்கு ரயில் விடவேண்டுமென்பதில் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. கன்னியாகுமரியின் இயற்கை அழகு அவரை வெகுவாகக் கவர்ந்திருந்தது. தவிரவும், 'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை' என்ற சொற்த்தொடர் உயிரூட்டப்பட வேண்டுமென்றால்;, குமரிக்கு ரயில் பாதை முக்கியத்தேவையென்று அவர் உணர்ந்திருந்தார். கன்னியாகுமரியில் எங்கே ரயில் நிலையம் அமைப்பது என நேரில் சென்று ஆராய்ந்து இடம் தேர்வு  செய்திட ரயில்வே அமைச்சர் ஹனுமந்தையாவை அம்மையார் அனுப்பி வைத்தார்கள். 

அதிகாரிகள் மற்றும் நண்பர்களைக் கலந்தாலோசித்து, குமரி அம்மன் ஆலயத்தின் அருகாமையில் ரயில் நிலையம் அமைக்கலாம் என இடம் தேர்வு செய்து பிரதமரிடம் ஹனுமந்தையா அறிவித்தார். அந்த இடம் இந்திரா அம்மையாருக்கு மனத்திற்குத் திருப்தியைத் தரவில்லை. ஆலயம் வரை இரயில் வருமானால், ஆலயமும், அதன் எதிரில் அமைந்த முக்கடலின் அழகும் குன்றி, இரயில்வே நிலையப் பரபரப்பும், தோற்றமுமே மிஞ்சும் என்பது அவரது கருத்து ஆகும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் கன்னியாகுமரிக்கு விஜயம் செய்த பிரதமர் இந்திராகாந்தி, ஒருநாள் அதிகாலையில் தனது பாதுகாவலர்களைக் கூடத் பாதுகாப்பாக வர வேண்டாமெனக் கூறி விட்டு, கடற்கரையில் நீண்ட தூரம் தனிமையில் நடந்து சென்றார். குமரி அம்மன் ஆலயத்தை தவிர்த்து சிறிது தொலைவில் உகந்த ஓர்  இடத்தை தானே தேர்ந்தெடுத்து, நிலையம் அங்கு அமைக்கப்படுவதுதான் சரியானது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். குமரி ரயில் நிலையம் அந்த இடத்தில்தான் உருவாகியுள்ளது சிறப்பு.

           இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரயில் பாதையை அப்போதைய பிரதமர் மெறார்ஜிதேசாய் 1979-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். திறப்புவிழாவின் போது இயக்கப்ட்ட முதல் ரயில் நான்கு மணி நேரத்தில் 85 கி.மீ., தூரத்தைக் கடந்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது. அவ்வமையம் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினராக குமரிஅனந்தன்; இருந்தார். இந்த பாதையில் 31கி.மீ தூரம் கேரளாவிலும்  54 கி.மீ தமிழ்நாட்டிலும் உள்ளது.  முதல் கட்டப் பணிகள் முடிவு பெற்ற நிலையில், ஆமை வேகத்தில் நடைபெற்றுவந்த இரண்டாம் கட்ட திட்மான நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில் பாதை பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. இத்தடத்தில்  ரயில் சேவை 08-04-1981 அன்று பயணிகள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

திருவனந்தபுரம் கோட்டம் அமைந்த வரலாறு:-
        இக்கோட்டம் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைக்கப்ட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில்  624.730 கி.மீ தொலைவுக்கு வழித்தடங்கள் உள்ளன. இதில் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தடம் 87கி.மீட்டரும் மற்றும் நாகர்கோவில் - திருநெல்வேலி வழித்தடம் 74கி.மீ என மொத்தம் 161.கி.மீ தொலைவுக்கு வழித்தடம் உள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் செயல்படுகின்ற 25 விழுக்காடு வழித்தடங்கள் நெல்லை மற்றும் குமரி மாவட்ட பகுதிகளில் இயங்குகிறது. குமரி மாவட்ட ரயில் தடங்கள் அமைக்கபட்டு சில காலங்கள் மதுரை கோட்டத்தின் கீழ் இருந்தது. திருவனந்தபுரம் ரயில் கோட்டம் 02-10-1979 அன்று அமைக்கப்ட்டது. இந்த ரயில்வே கோட்டம் அமைக்க 1978-79 ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்ட்டது. இது நடந்த போது நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் குமரிஅனந்தன் ஆவார். 

இதல் அவர் மவுனம் சாதித்தார அல்லது ஒத்துளைப்பு தந்தாரா என்று பாராளுமன்ற உரைகளை சரிபார்த்துதான் கூறமுடியும். அவ்வமையம் திருநெல்வேலியிலிருந்து இருப்புபாதை இணைப்பு நாகர்கோவிலுக்கு இல்லாதிருந்ததனால், இதன் நிர்வாகப் பொறுப்பை 1979 அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்ட திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துடன், ஒரு  நிபந்தனையுடன் இணைக்கப்பட்டது.  நிபந்தனை யாதெனில், திருநெல்வேலி - நாகர்கோவில் இணைப்பு முடிந்த உடனே குமரி மாவட்ட உள்ள அனைத்து ரயில் போக்குவரத்து நிர்வாகத்தை மதுரை கோட்டத்துடன் இணைத்து விட வேண்டும் என்பதேயாகும். நாகர்கோவில் - திருநெல்வேலி 73.29கி.மீ தூரம் ரயில்வழித்தடம் 02-04-1981-ம்  ஆண்டு ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. 

இந்த ரயில் வழித்தடம் துவங்கப்பட்டதும் குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் மாற்றியிருக்க வேண்டும். ஆனால் இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்தாமல் நிர்வாகத்தை திருவனந்தபுரம் கோட்டத்தில் தொடர்ந்து நீடிக்கச் செய்யப்பட்டது. இது மட்டும் இல்லாமல் புதிதாக துவங்கப்ட்ட ரயில் வழித்தடமும் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்ட்டது. இவ்வாறு திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைப்பதை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. குமரி மாவட்ட மக்கள் ரயிலைப்பற்றிய போதிய விளிப்புணர்வு இல்லாத காரணத்தால் மாவட்டத்தில் எந்த வித போராட்டமோ கோரிக்கையோ வைக்கப்படவில்லை. இந்த போராட்டத்தில் குமரி மாவட்ட மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து நெல்லை மாவட்ட மக்களுடன் இணைந்து போராடியிருந்தால் குமரி மாவட்ட ரயில்வழித்தடங்கள் அணைத்தும் 1981-ம் ஆண்டே மதுரை கொட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். திருநெல்வேலி மாவட்ட மக்களின் இந்த போராட்டங்களையும் மீறி இந்த திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் வழித்தடமும் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்ட்டன. 

ரயில்கள் கடந்து வந்த பாதை

எண் 
வருடம் தற்போதைய
வண்டி எண் வண்டி விபரம் சேவை
 1979 56311ஃ56310 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில் தினசரி
 1979 56316ஃ56315 நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில தினசரி
 1981 56312ஃ56321 நாகர்கோவில் - திருநெல்வேலி பயணிகள் ரயில் தினசரி
 1983 56319ஃ56320 நாகர்கோவில் - திருநெல்வேலி பயணிகள் ரயில் பின்னர் கோவை வரைநீட்டிப்பு செய்யப்பட்டது தினசரி
 1985 56701ஃ56700 கொல்லம் - நாகர்கோவில் பயணிகள் ரயில் பின்னர் மதுரை வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தினசரி
 1984 16317ஃ16318 கன்னியாகுமரி – ஜம்முதாவி ரயில் வாரத்திர சேவை
 1984 16381ஃ16382 கன்னியாகுமரி – மும்பை தினசரி எக்ஸ்பிரஸ் தினசரி
 1988 16525ஃ16526 திருவனந்தபுரம் - பெங்களுர் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு தினசரி
 1992 16525ஃ16526 நாகர்கோவில்- பெங்களுர் ரயில் கன்னியாகுமரி; வரை நீட்டிப்பு தினசரி
 1992 16336ஃ16335 நாகர்கோவில் - காந்திதாம்   எக்ஸ்பிரஸ் வாரத்திர சேவை
 1994 12634ஃ12633 கன்னியாகுமரி – சென்னை எக்ஸ்பிரஸ் தினசரி
 1994 16128ஃ16127 நாகர்கோவில் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் தினசரி
 1995 16339ஃ16340 நாகர்கோவில் - மும்பை வாராந்திர எக்ஸ்பிரஸ் வாரத்திர சேவை
 1996 16339ஃ16340 நாகர்கோவில் - மும்பை வாராந்திர ரயில் வாரத்துக்கு மூன்று நாள் இயக்கம்  வாரத்துக்கு மூன்று நாள்  சேவை
 1998 16339ஃ16340 நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் வாரத்துக்கு மூன்று நாள் ரயில் நான்குநாள் இயக்கம்  வாரத்துக்கு நான்கு நாள்  சேவை
 1998 16336ஃ16335 நாகர்கோவில் - காந்திதாம்  எக்ஸ்பிரஸ் ரயில் கொங்கன் ரயில் பாதையில் வழித்தடம் மாற்றி விடப்பட்டது 
 2000 16351ஃ16352 நாகர்கோவில் - திருப்பதி எக்ஸ்பிரஸ் வாரத்துக்கு 2 நாள்  
 2000 12665ஃ12666 ஹவுரா – திருச்சி வாரத்துக்கு மூன்று நாள் ரயிலில் ஒருநாள் சேவை மட்டும் கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.  வாரத்திர சேவை
 2001 12660ஃ12659 நாகர்கோவில் -ஷாலிமர் எக்ஸ்பிரஸ் வாரத்திர சேவை
 2002 12641ஃ12642 கன்னியாகுமரி – நிசாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் வாரத்திர சேவை
 2002 16723ஃ16724 சென்னை – திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்
வாரத்துக்கு ஆறு நாள் மட்டும் வாரத்துக்கு ஆறு நாள் மட்டும்
 2004 12689ஃ12690 நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல்  வாரத்திர சேவை
 2005 16723ஃ16724 சென்னை – திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்
ரயில் தினசரி ரயிலாக மாற்றம்  தினசரி 
 2006 12668ஃ12667 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாரத்திர சேவை
 2007 16609ஃ16610 நாகர்கோவில் - கோயம்பத்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி
 2007 56304 கோட்டையம் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு  தினசரி
 2009 22619ஃ22620 திருநெல்வேலி – பிலாஸ்பூர்  வாரத்திர சேவை
 2009 12998ஃ12997 திருநெல்வேலி - ஹாப்பா வாரத்துக்கு 2 நாள்
 2010 22622ஃ22621 கன்னியாகுமரி – ராமேஸ்வரம்  வாரத்துக்கு 3 நாள்
 2010 16605ஃ16606 கொச்சுவேலி – மங்களுர் ஏரநாடு ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு வாரத்துக்கு 3 நாள்
 2010 16605ஃ16606 நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயில் வாரத்துக்கு 3 நாள் தினசரி ரயிலாக மாற்றம் தினசரி
 2011 15906ஃ15905 கன்னியாகுமரி – திப்ருகர்  வாரத்திர சேவை
 2011 66305ஃ66304 நாகர்கோவில் - கொல்லம் மெமு ரயில் வாரத்துக்கு 6 நாள்
 2012 16649ஃ16650 திருவனந்தபுரம் – மங்களுர் பரசுராம் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு தினசரி
 2012 12641ஃ12642 கன்னியாகுமரி – நிசாமுதீன் திருக்குறள் வாரந்திர ரயில் வாரத்துக்கு இரண்டு நாள் ரயிலாக மாற்றம் வாரத்துக்கு 2 நாள்
 2013 16862ஃ16861 கன்னியாகுமரி – புதுச்சேரி  வாரத்திர சேவை
 2013 17236ஃ17235 நாகர்கோவில் - பெங்களுர் வழி மதுரை தினசரி
 2013 66305ஃ66304 நாகர்கோவில் - கொல்லம் மெமு ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு வாரத்துக்கு 6 நாள்
 2013 56325 நாகர்கோவில் - கன்னியாகுமரி பயணிகள் ரயில் வாரத்துக்கு 6நாள் சேவை தினசரி அதிகரித்தல் தினசரி
 2013 56321 திருநெல்வேலி - கன்னியாகுமரி பயணிகள் ரயில் வாரத்துக்கு 6நாள் சேவை தினசரி அதிகரித்தல் தினசரி
 2013 56312 நாகர்கோவில் - திருநெல்வேலி பயணிகள் ரயில் வாரத்துக்கு 6நாள் சேவை தினசரி அதிகரித்தல் தினசரி
 2014ழூ  நாகர்கோவில் - காச்சுகுடா(ஐதராபாத்) வாராந்திர ரயில்
 2014ழூ  கன்னியாகுமரி – புனலூர் பயணிகள் ரயில் தினசரி
ழூ2014-ஆம் ஆண்டு அறிவிக்கப்ட்ட ரயில் பின்னர் இயக்கப்படும்.

       குமரி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும்  இப்பிராச்தியத்தைப் பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும்; கடந்த 34 ஆண்டுகளாக  எடுக்கவில்லை. தற்போது இந்த பிரச்சனைகள் பற்றி அவ்வப்போது பேசப்பட்டு வருவதோடு  நின்று விடுகிறது. குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில்  அதன் வளர்ச்சிப் பணிகளில் உத்வேகம் காட்டப்படவில்லை. குமரி மாவட்டத்தில் மொத்தமாக நாகர்;கோவில் சந்திப்பு, கன்னியாகுமரி, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், ஆரல்வாய்மொழி, பள்ளியாடி, குழித்துறை மேற்கு, வீராணிஆளுர், சுசிந்திரம், தோவாளை உட்பட 11 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் நாகர்கோவில் சந்திப்பு மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் பெரிய  எ பிரிவு ரயில் நிலையங்கள் ஆகும். இந்த 11 ரயில் நிலையங்களில் அனைத்து ரயில் நிலையங்களும் அதிக இடைவெளித் தூரத்திலும் பேருந்து வசதிகள் இல்லாத ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்களில் பொதுமக்கள் ரயில் நிலையத்தை உபயோகபடுத்தக் கூடாது எனற் உள்நோக்குடனேயே அமைத்துள்ளனர் இந்த மலையாள அதிகாரிகள். இந்த காரணத்தால் குமரி மாவட்ட ரயில் பயணிகள் இச்சிறு நிலையங்களிலிருந்து  ரயிலில் பயணம் மேற்கொள்ள யோசிக்கவைக்கிறது. முதல் திட்ப்படி நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் செட்டிகுளம் இந்துகல்லூரி இடையில் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.  இதற்காக ஆளுரில் இருந்து நேர்பாதையாக டாக்டர் மத்தியதாஸ் வீட்டுக்கு தென்புறம் வழியாக செட்டிகுளம் வந்தடையும். பிறகு இதில் மாற்றம் செய்து ஒழுகினசேரி பயோனியர்முத்து தியேட்டர் இடத்தில், மீனாட்சிபுரம் பஸ்நிலையம் அமைப்பதற்கான திட்டமிடப்பட்டதும். பிறகு இதையும் ஒதுக்கிவிட்டு ஊருக்கு ஒதுக்குபறம்பான கோட்டார் பாஜார் அருகில் நிறுவப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்களின் தலையீட்டால் இந்த மாற்றங்கள் அனைத்தும் நடந்தன. ஆனால் கேரளாவில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களும் நகரத்தின் முக்கிய பகுதிகளில்தான் அமைக்கப்ட்டுள்ளது என்பது நோக்குதற்குரியது.  


எண் ரயில் நிலையம் நிலை நிதிஆண்டு
2011-12
1 நாகர்கோவில் சந்திப்பு யு 26இ27இ88இ715  
2 கன்னியாகுமரி யு 11இ03இ190இ22
3 குழித்துறை டீ 4இ04இ35இ594
4 இரணியல் நு 1இ12இ47இ700
5 ஆரல்வாய்மொழி நு 21இ82இ638
6 நாகர்கோவில் டவுண் நு 68இ73இ310
7 குழித்துறை மேற்கு கு 9இ51இ106
8 பள்ளியாடி கு 3இ99இ510
9 சுசீந்தரம் கு 0
10 தோவாளை கு 1இ27இ898
11 வீராணிஆளுர் கு 1இ77இ614
12 மேலப்பாளையம் கு 1இ54இ459
13 வள்ளியூர் னு 3இ51இ56இ321
14 நான்;குநேரி னு 1இ03இ01இ839
15 செங்குளம் நு 64இ892
16 பணக்குடி கு 1இ25இ287
மொத்த 2011-12-ம் ஆண்டு வருமானம் 48இ13இ05இ905

ரயில்வே துறையால் இரண்டு பக்கத்திலிருந்தும் மரண அடிவாங்கும் குமரி மாவட்டம்.
        கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சிறிய மாவட்டம் ஆகும். குமரி மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை அடர்;த்தி நிறைந்த மாவட்டம் ஆகும். குமரி மாவட்ட பயணிகள் திருநெல்வேலி,மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி போன்ற இடங்களுக்கு வேலைவாய்ப்பிற்காகவும், மேற்கல்விக்காகவும், வணிக சம்மந்தமாகவும் தினசரி ஆயிரகணக்காகவர்கள் பயணிக்கின்றனர். மதுரையில் உயர்நீதி மன்றம், வேலைவாய்ப்பு அலுவலகமும்,  திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பல்கலைகழகம் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு தினசரி நூற்றுகணக்காக பயணிகள் பயணிக்கின்றனர். கடந்த 2012 ரயில் பட்ஜெட்டில் திருச்சி – திருநெல்வேலி தினசாரி ரயில், திருநெல்வேலி – தாதர் வராந்திர ரயில், தாதர் -பெங்களுர் வாரத்துக்கு மூன்றுநாள் ரயில் திருநெல்வேலி வரை நீட்டிப்பு ஆகிய ரயில்கள் திருநெல்வேலிக்கு அறிவிக்கபட்டுள்ளது. இந்த ரயில்கள் நாகர்கோவிலிருந்து இயக்கபட்டு இருந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பயணிகளுக்கும் ரயில் வசதி கிடைத்திருக்கும், குமரி மாவட்ட பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஒரு மார்க்கம் அனைத்து ரயில்களையும் திருவனந்தபுரத்துடன் ரயில்வே துறை நிறுத்திவருகிறது. தற்போது ரயில்வேதுறை அனைத்து ரயில்களையும் திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு மதுரை மார்க்கம் இயக்குமாறு அறிவிக்கபட்டுள்ளது. கடந்த 2012 ரயில்வே நிதிநிலை அறிக்கையில்  மூன்று ரயில்கள் திருநெல்வேலியுடன் நிற்பதையும் வேடிக்கை பார்ப்பதை தவிர குமரி மக்களுக்கு வேறு வழி இருக்காது.  இது  'நெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை' என்ற கூற்று உண்மையாகி வருகிறது. இவ்வாறு குமரி மாவட்டத்துக்கு இரண்டு மார்க்கத்திலிருந்தும் மரணஅடிவாங்கி வருகிறது. குமரி மாவட்ட பயணிகள் நெடுந்தூரங்களுக்கு பயணிக்க திருவனந்தபுரம் அல்லது திருநெல்வேலி வரை பேருந்துகளில் பயணம் செய்து அங்கிருந்து புறப்படும் ரயில்களில் பயணிப்பதை தவிர வேறு வழி இல்லை.

கேரளத்தவரின் ஒற்றுமை:-
          கேரள மாநிலத்தை பொறுத்தவரை, அவர்களுக்கு அவர்கள் மாநில நலனுக்கு, மக்கள் நலனுக்கு எதாவது தேவையென்றால் அனைத்து. கவனிக்க அனைத்து கட்சியினரும் தங்கள் பிரச்சனைகளை மறந்து ஒன்று திரண்டு எதிர்கட்சி முதல்வர் உட்ப்பட மத்திய அரசிடம் வாதாடி பெற்றுக்கொள்கிறார்கள். கேரள அரசியல்வாதிகள் இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கியதைக்கூட ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறையும் என்கிற பயம் ஒன்று. மரியாதை (பிரெஸ்டீஜ்) குறையும் என்கிற பயம் இரண்டு. அதன் காரணமாக தான் கேரளத்தில் இருக்கும் ஒரே ஒரு ரயில் தடமான திருவனந்தபுரம் - மங்களுர் பாதையும் அதன் துணைபாதைகளான ஷொரனூர்-பாலக்காடு-கோவை; திருச்சூர்-குருவாயூர்; எர்ணாகுளம்-செங்கனூர்-கோட்டயம் ஆகிய பாதைகள் முழுமையும் அகலபாதையாகவும் மின்மயமாகவும் ஆக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றது.  ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை, ஒற்றுமை என்பது நம்மிடம் சுத்தமாக இல்லை. அது இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒவ்வொரு சிறு பிரச்சனையையும் மிக மிக குறுகிய மனப்பான்மையுடன் அணுகி, ஒன்றுமேயில்லாத பிரச்சனைகளை கூட ஊதி பெரிதாக்கி அதில் குளிர்காயும் இயல்பு மாறாமல் இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழகத்துக்கு கிடைத்திருக்கவேண்டிய பல ரயில்கள், பல ரயில்பாதைகள், மின்மயமாக்கல் போன்றவை ஆமை வேகத்தில் இயங்கி வருகின்றன. அழுகிற குழந்தைக்கு தான் பால் என்பதை போல, வற்புறுத்திக்கொண்டிருப்பவர்களை முதலில் கவனித்துக்கொண்டால் மற்றவர்களை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலை மத்திய ரயில்வே வாரியத்துக்கு வந்துவிட்டது போன்ற ஒரு தோற்றம் தென்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு விஷயத்தையும், விஷமமாகவும், குறுகிய மனப்பான்மையுடனும், தனிப்பட்ட அரசியல் விஷயமாகவும், யார் மீது குற்றம் சுமத்தலாம் என்கிற காரண தேடலுடனும் மட்டுமே அணுகிக்கொண்டிருப்பதற்கு மிக பெரிய உதாரண பட்டியலே இருக்கிறது. இதை போல் கடந்த ஐந்து ஆண்டுகால ரயில் பட்ஜெட்டை பார்த்தால் தமிழகத்தில் உள்ள ஓர் சிறிய ஊருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அங்கு மட்டும் புதிய ரயில்கள் இயக்கப்படுவதை காணலாம்.

ரயில்களை முக்கிய நேரடி ரயில் பாதை (மெயின் லைன்) வழியாக இயக்குதல்
         குமரி மாவட்டத்தில்   1979-ம் ரயில் நிலையம் அமைக்கும் போதே இங்கு உள்ள 11 ரயில் நிலையங்களில் குழித்துறை, இரணியல், ஆரல்வாய்மொழி  ரயில் நிலையங்கள் கிராசிங் ரயில் நிலையங்களாக அமைக்கப்பட்டன. இந்த ரயில்நிலையங்களை அமைக்கும் போதே ரயில்வே அதிகாரிகள் தொழில் நுட்பக்கோளாறாக முதலாம் நடைமேடையை பக்க இணைப்பு ரயில் பாதை (லூப் லைனாக)  வரும்படி அமைத்துள்ளனர். இது நடைமுறைக்கு மாறான தொழிற்நுட்பத்தவறாகும். இது தெற்கு ரயில்வே அதிகாரிகளின் உள்ளடிவேலை ஆகும். இவைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். சென்ற 2012-ம் ஆண்டு ஜுலை மாதம் முதல் குமரி மாவட்ட ரயில் பகுதிகளில் அனைத்து ரயில்களையும் நேரடி ரயில் பாதை (மெயின் லைன்) வழியாக அதாவது நடைமேடை இரண்டு வழியாக இயக்குகின்றனர். ஆனால் இந்த ரயில்கள் நிலையத்தில் வரும் சமயத்தில் முதல் நடைமேடை காலியாக இருக்கிறது. இது குறித்து நிலைய மேலாளரிடம் முறையிட்டால் ரயில்களின் காலம் தவறாமல் இயக்குதல், ரயில்களின் இயக்கக்குறித்த காரணங்களுக்காகவும் இவ்வாறு இயக்கபடுகிறது என்று தெரிவிக்கின்றனர். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை இரண்டில் பயணிகளுக்குத் தேவையான வசதிகளான இருக்கை, நடைமேடை மேற்கூரை, தண்ணீர் வசதி, பெட்டிகளின் தகவல் அறியும் பலகை போன்ற எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. இது மட்டும் இல்லாமல் ஒரு சில ரயில் நிலையங்களில் நடைமேடை இரண்டுக்கு செல்ல நடைமேடை மேம்பாலம் வசதி இல்லாமல் பயணிகள் மிகவும் சிரமபடுகின்றனர். அபாயம் நிறைந்த ரயில் பாதையைக் கால்நடையாக கடந்துதான் நடைமேடை இரண்டிற்கும் செல்லவேண்டியுள்ளது. சிறுபிள்ளைகளையும் மூட்டை முடிச்சுகளையும் சுமந்து கொண்டு தண்டவாளங்களை கடப்பதைவிட ரயில்பயணத்தைத் தவிர்ப்பதற்காகவே இத்தகைய நெறிதவறிய  அமைப்புமறைகளை மலையாளி பொறியாளர்கள் கையாண்டனர் என்றுகூக் கருதலாம். பொதுவாக குமரிவாழ் தமிழர்களுக்கு தொல்லை தருவதிலேயே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் மலையாளிகள் இதை ஏன் என்று கேட்பதற்கு குமரிதந்தை மார்ஷல் எ.நேசமணிக்குப்பிறகு இம்மணிணில் எவரும் தோன்றவில்லை என்பதே துயரைதருகிறது. 

தன் கையாலே தன் கண்ணை குத்தும் படி செய்யும்; திருநெல்வேலி கோட்டம்.:-

             தென் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அனைத்து ரயில் வழி தடங்களையும் ராமநாதபுரம், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் உள்ள ரயில் வழி தடங்களையும் கேரளாவின் கீழ் கொண்டு செல்ல மறைமுகமாக சதிவலை பின்னப்பட்டுள்ளது. ஒரு ரயில்வே மண்டலம் வேண்டும் என்றால் மூன்று கோட்டங்கள் தேவை. கேரளாவினர் அவர்கள் மாநிலத்துக்கு என தனியாக ரயில்வே மண்டலம் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றனர்.    கேரளாவில் தற்போது 1050கி.மீ தூரம் ரயில் வழி தடம் மட்டுமே உள்ளது. ஆனால் திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு என இரண்டு ரயில் கோட்டங்கள் உள்ள தமிழக ரயில் வழி தடங்களை சேர்த்து மொத்தம் 1200 கி.மீ ரயில் வழி தடங்கள் உள்ளன. கேரளாவில் புதிய ரயில்வழி தடங்கள் திட்டங்கள் புதிதாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. மூன்றாவது கோட்டத்துக்கு சேலம் அல்லது மதுரை கோட்டத்தின் மீது கண் வைத்துள்ளனர். தற்போது தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் என்று நாம் கோரிக்கை வைத்தால் அவர்கள் வெகு சுலபமாக அந்த புதிய கோட்டத்தை உள்ளடக்கி கேரளாவுக்கு சாதகமான மத்திய அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகள் மூலமாக உள்ளடி வேலைகளில் ரகசியமாக ஈடுபட்டு கேரளாவுக்கு என தனியாக ரயில்வே மண்டலம் வாங்கி வெகு சுலபமாக பெற்றுவிடுவார்கள். தெற்கு ரயில்வேயில் புதிதாக எதாவது ஒரு கோட்டம் அமைக்கபடுமானால் கோரளா எல்கையில் அருகில் உள்ள மதுரை அல்லது சேலம் கோட்டத்ததை உள்ளடிக்கி கேரளாவுக்கு என தனி மண்டலம் அமைத்து விடுவர். ஏற்கனவே பாலக்காடு கோட்டத்திலிருந்து 50 வருட போராட்டத்துக்கு பிறகு தனி கோட்டமாக உருவெடுத்த சேலம் கோட்டதை மீண்டும் கேரளா ரயில்வே மண்டலத்துடன் இணைக்கு சாத்திய கூறுகள் குறைவு மற்றும் அந்த பகுதி மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி செயல்படுத்த மூடியாத நிலை உள்ளது. அவர்களின் அடுத்த இலக்க மதுரை கோட்டம்தான். இந்த நிலையில் மதுரை கோட்டத்தை இரண்டாக பிரித்தால் நாமே கேரளாவை தலைமையிடமாக கொண்ட ரயில்வே மண்டலம் உருவாக்க வழிவகை செய்வதாக அமைந்துவிடும். இவ்வாறு செய்தால் தென்தமிழக ரயில் வழிதட பகுதிகள் அனைத்தும் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட மேற்கு கடற்கரை ரயில்வே மணிடலத்தின் கீழ் வந்து விடும். சென்னையை தலைமையிடமாக தெற்கு ரயில்வே கீழ் உள்ள போதே தென்தமிழ்நாடு வளர்ச்சி பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கபடுகிறது. இந்த நிலையில் கேரளா ரயில்வே மணிடலத்தின் கீழ் போய்விட்டால் இந்த பகுதிகளில் வளர்ச்சி பணிகள் புதிய ரயில்கள் இயக்கம் என்பதே இல்லாத நிலை ஏற்படும்.  குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள ரயில் வழி தடங்களை மதுரை கோட்டத்துடன் உடணடியாக இணைக்க வேண்டும். கேரளாவை தலைமையிடமாக தனி மண்டலம் அமைப்பதற்கு ஒரு போதும் தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

                திருநெல்வேலியில் புதிய கோட்டம் உருவாக்கப்பட்டால் சென்னையை தலைமையிடதாக கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில்  ஏழு கோட்டங்கள் உருவாகும். இந்தியாவில் இது வரை எந்த மண்டலத்திலும் ஏழு கோட்டங்கள் இல்லை. கேரளாவிலிந்து உடனடியாக தெற்கு ரயில்வே மண்டலத்தை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு என தனிமண்டலம் வேண்டும் என கோரிக்கை வலுபெற்று பிரித்து விருவார்கள். தற்போது திருநெல்வேலியை தலைமையிடமாக தனி கோட்டம் வேண்டும் என்று கோரிக்கைக்கு பின்பு கேரளாவை சார்ந்த ரயில்வே அதிகாரிகள் உள்ளனர். இதைபோல் கேரளாவில் உள்ள பத்திரிகைகளிலும் திருநெல்வேலி கோட்டம் என்று செய்திகள் அடிக்கடி வெளியீட்டு வருகின்றனர். இது அவர்களின் தூண்டுதலிலேயே நடைபெறுகிறது. அவர்கள் கேரளாவுக்கு என தனி மண்டலம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி நம்மை தூண்டிவிட்டு அவர்கள் தமிழக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அனைத்து ரயில் வழி தடங்களையும் ராமநாதபுரம், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் உள்ள ரயில் வழி தடங்களையும் கேரளாவின் மழு கட்டுபாட்டில் கொண்டு சென்று விடுவார்கள். தற்பொது திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மற்றம் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வளர்ச்சி மற்றும் புதிய ரயில்கள் இயக்கத்தை ஒப்பிடும் போது மதுரை கோட்டத்தில் உள்ள திருநெல்வேலி, தூத்துகுடி, விருதுகர் மாவட்டங்களில் உள்ள ரயில் வளர்ச்சி, ரயில் நிலையங்கள் மற்றும் புதிய ரயில்கள் இயக்கம் புறக்கணிப்பு இல்லாமல் நல்ல நிலையில் உள்ளன. கடந்த 2012 ரயில் நிதிநிலை அறிக்கையில் கூட திருநெல்வேலியிருந்து மூன்று புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. திருநெல்வேலி மற்றும் அதைசுற்றிய பகுதிகளிலிருந்து வரும் காலங்களில் அதிகமான புதிய ரயில்கள் இயக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடதக்கது. திருநெல்வேலி கோட்டம் உருவாக்கி அதை உள்ளடக்கி கேரளாவுக்கு என தனி மண்டலம் உருவாக்குவதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். குமரி மாவட்டம் திருவனந்தபுரம் கோட்டத்தில் தற்போது உள்ளதால் நாங்கள் படும் கஷ்டம் தெரிந்த காரணத்தால் கேரளா ஆதிக்கம் வேண்டாம் என்று எதிர்க்கிறோம்.

புறக்கணிப்பு:-
 திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் வருகின்ற கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு வருகிறது. இக்கோட்டத்தின் கீழ் வருகின்ற கேரள மாநிலப் பகுதிகளில் ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு அக்கறை எடுத்துகொள்கின்ற திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் நலனை புறந்தள்ளுவது தொடர் கதையகிவிட்டது. குமரி மாவட்டத்துக்கு புதிய ரயில்களை இயக்கவும், இங்குள்ள ரயில் வசதிகளைப் பெருக்கவும் ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டுவருகின்றன. நமது அரசியல்வாதிகளும், தலைவர்களும் இதுகுறித்து கண்டுகொள்வதுமில்லை.

1) ரயில்நிலையங்கள் ஊருக்கு ஒதுக்குபுறம்பாக அமைக்கப்பட்டது:-
      குமரி மாவட்டத்தில் உள்ள பல ரயில் நிலையங்கள்; அதிக தூரத்திலும் பேருந்து வசதிகள் இல்லாத ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்களில் பொதுமக்கள் ரயில் நிலையத்தை உபயோகபடுத்த கூடாது என்ற  நோக்குடனேயே அமைத்துள்ளனர் கேரளாவை சார்ந்த அதிகாரிகள். ஆனால் கேரளாவில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் பேருந்துநிலையத்தின் அருகிலும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலிருந்து  அடுத்த ஒரு கி.மீ தூரத்தில் அடுத்த ரயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையத்துக்கும் அடுத்த ரயில்நிலையத்துக்கும் இடையே சராசரியாக ஆறு கி.மீ தூரம் உள்ளது. 

2) தமிழக ரயில்நிலையங்;களை தொழில் நுட்பக்கோளாரக அமைக்கப்பட்டது.
        திருவனந்தபுரத்திலிருந்து தமிழகம் நோக்கி அமைக்கப்பட்ட ரயில்வழித்தடங்களில் உள்ள நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், ஆரல்வாய்மொழி, வள்ளியூர், நான்குநேரி கிராசிங் ரயில்நிலையங்களை அமைக்கும் போதே கேரளாவை சார்ந்த அதிகாரிகள் தொழில் நுட்பக்கோளாராக முதலாம் நடைமேடையை பக்க இணைப்பு ரயில் பாதை (லூப் லைனாக)  வரும்படி வேண்டும்என்றே அமைத்துள்ளனர். இது ரயில்வே அதிகாரிகளின் உள்ளடிவேலை ஆகும். குமரி மாவட்ட ரயில் பகுதிகளில் அனைத்து ரயில்களையும் நேரடி ரயில் பாதை வழியாக (மெயின் லைன்) வழியாக அதாவது நடைமேடை இரண்டு வழியாக இயக்கி குமரி மாவட்ட ரயில் பயணிகளை வேண்டும் என்றே சிரமப்படுத்துகின்றனர்.

3) பயணிகளுக்கு தேவையான (Pயளளநபெநச யுஅநnவைநைள)  வசதி செய்தல்:
       குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அமைந்திருக்கின்ற திருவனந்தபுரம் கோட்ட ரயில் நிலையங்களிலும் வருமானத்துக்கு ஏற்ப செய்யப்படும் பயணிகளின் வசதிக்கான  (Pயளளநபெநச யுஅவைவைநைள) பணிகளை கேரளா அதிகாரிகள் செய்து தருவது இல்லை. தமிழக ரயில் நிலையங்களில் குறைந்தபட்ச வசதிகளான குடிநீர் வசதி, பிளாட்பாரம் மேற்கூரை, தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம், இருக்கைகள், பயணிகள் ஓய்வு அறை, கணிப்பொறி முன்பதிவு மையம், ரயில் பெட்டிகளின் விபரம் அறியும் பலகை, இணைப்புசாலை, அமைத்தல், நடைமேடையின் அளவை நீட்டுதல், கணிப்பொறி ஒலிபெருக்கி வசதி, நடைமேடையில் அலங்கார ஓடுகள் பதித்தல்;, கழிப்பிட வசதி, தொலைகாட்சிபெட்டி மூலமாக ரயில்களின் வருகையை அறிவித்தல் போன்ற  பல்வேறு விதமான  பயணிகளுக்கான வசதிகள் ஏதும் செய்வது இல்லை.

4) இரவு நேர ரயில்கள்:
    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரயில்கள் குமரி மாவட்ட பயணிகள் பயன்படாதவாறு இரவு நெரங்களில் இங்கிருந்து புறப்பட்டு கேரளாவில் பயணிக்கும் போது பகலில் செல்லுமாறு காலஅட்டவணை அமைத்து இயக்கப்படுகிறது. இவ்வாறு திருநெல்வேலி – பிலாஸ்பூர், நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயில் என இரண்டு ரயில்கள் இவ்வாறு இயக்கப்படுகிறது. இந்த ரயில்களின் கால அட்டவணையை மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்பது குமரி மாவட்ட பயணிகளிள் கோரிக்கை ஆகும்.

5) கேரளா வழியாக சுற்று பாதையில் இயக்கப்படும் ரயில்கள்:-
   குமரி மாவட்டத்திலிருந்து எண்ணிக்கைக்காக பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டாலும் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் ரயில் என்று எடுத்துகொண்டால் மிக சொர்ப்ப அளவிலே உள்ளது.  கன்னியாகுமரி – மும்பை;, கன்னியாகுமரி – திருப்புகர்;, நாகர்கோவில் - ஷாலிமார்;, கன்னியாகுமரி – ஜம்முதாவி;, திருநெல்வேலி – பிலாஸ்பூர்;; போன்ற ரயில்கள் சுற்று பாதையில் செல்லும் ரயில்கள் ஆகும். இந்த ரயில்களால் குமரி மாவட்ட பயணிகளுக்கு எந்த உபயோகமும் இல்லை. இந்த ரயில்களை கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக இயக்கிவிட்டு, வேறு புதிய ரயில்களுக்கு நாகர்கோவிலில் இடமில்லாத படி செய்துவிடுகின்றனர் ரயில்வே அதிகாரிகள். இதில் தமிழக பயணிகள் பயணம் செய்ய வேண்டும் என்றால்; அதிகபயணகட்டணம் செலுத்தி கேரளா வழியாக சுற்றி கூடுதலாக பயணம் செய்ய வேண்டும். இதனால் அதிக பயணநேரமும், பணவிரயமும் ஏற்படுகிறது. இந்த பிரச்சகை குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு டென்னீஸ் அவர்கள் இது குறித்து 1996-ம் ஆண்டு ஜுலை மாதம் 25-ம் தேதி பாராளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் விவாதத்தின் போது கீழ் கண்டவாறு பேசியுள்ளார்கள். 
                                 ' ழேற வாநசந ளை Pழளளiடிடைவைல கழச சயடைறயல ளுநசஎiஉநள வாசழரபா றநளவநசn ளனைந i.ந. வுசiஎயனெசயஅ ளனைந யனெ யடளழ வாசழரபா வுசைரநெடஎநடi ளனைந. குழச வாந ழிநசயவழைn ழக வுசயiளெ கசழஅ முயலெயமரஅயசi வழ ழவாநச pயசவள ளரஉh யள னுநடாiஇ ஊயடஉரவவயஇ வாந னளைவயnஉந ளை ளாழசவ வாசழரபா வுhசைரநெடஎநடi யனெ ளரஉh ழிநசயவழைn உயn டிந நஒpநசiஅநவெநன யனெ ளரஉh வுசயin ளநசஎiஉநள hயஎந வழ டிந ழிநசயவநன.  வுhளை றழரடன ளயஎந வiஅந யனெ யடளழ சநனரஉந வாந னளைவயnஉந'
(ளுpநநஉh டில ளூசi N னுநnnளைஇ (யேபநசஉழடை) in டுழம ளுயடிய னநடியவநளஇ ளநளளழைn ஐஐ – டீரனபநவ ழn வுhரசளனயல வாந துரடல 25இ 1996)
                அவர்கள் 1996-ம் ஆண்டே பாராளுமன்றத்தில் பதிவு செய்தும் ரயில்வே அதிகாரிகள் இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ஆனால் அதன் பிறகும் 2001-ம் ஆண்டு நாகர்கோவில் - ஷாலிமர் ரயிலும், 2009-ம் ஆண்டு திருநெல்வேலி – பிலாஸ்பூர் ரயிலும், 2011-ம் ஆண்டு கன்னியாகுமரி – திருப்புகர் ரயிலும் அறிவிக்கப்பட்டு தொடர்கதையாகவே இயக்கப்பட்டு வருகிறது. 

6) ஓரே கோட்டத்தில் இரண்டு விதமான வசதி:
    கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை பகல் நேரங்களில் இயங்குகின்ற அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யபடும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாமலே பயணம் செய்யும் கேரளப்பயணிகளின் வசதிக்காக மட்டும் ஓரு வசதி உள்ளது. இந்த வசதி திருவனந்தபுரத்திலிருந்து திருநெல்வேலி மார்க்கம் இயங்குகின்ற ரயில்களில் கிடையாது. குமரி மற்றும் நெல்லை பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்தன் கீழ் வந்தும்  இப்பகுதிகள் தமிழக பகுதிகளாக இருப்பதால் இந்த வசதியை கேரளா அதிகாரிகள் தர மறுக்கிறார்கள். ஓரே கோட்டத்துக்குள் இரண்டு விதமான வசதிகளை அதிகாரிகள் பின்பற்றிவருகிறார்கள். இது ஓர் மாற்றாந்தாய் நிர்வாகச் சீர்கேடாகும். 

7) புதிய ரயில்கள்:
    ஓவ்வொரு ரயில் பட்ஜெட்டிலும் கேரளாவுக்கு என ஐந்து முதல் பத்து ரயில்கள் அறிவிக்கபட்டு வருகிறது. ஆனால் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரியிலிருந்து ஒரு பட்ஜெட்டுக்கு ஒரு ரயில் வீதம் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தும் கோட்ட அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். அதையும் மீறி ஒரு சில ரயில்கள் அறிவித்தால் அந்த ரயில் நாகர்கோவிலிருந்து புறப்பட்டு கோரளா வழியாக சுற்று பாதையில் இயங்கும் படி அமைக்கபட்டிருக்கும். இந்த ரயில்களால் குமரி மாவட்ட பயணிகளுக்கு எவ்விதப் பயனுமில்லை.

8) ரயில் நீட்டிப்பு செய்ய மறுக்கும் கோட்ட அதிகாரிகள்:
      திருவனந்தபுரத்திலிருந்து இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் நெடுந்தூர ரெயில் வசதிகள் உள்ளன. திருவனந்தபுரத்திலிருந்து மாலை நேரத்தில் மங்களுருக்கு புறப்படும் மூன்று ரயில்களில் எதாவது ஒரு ரெயிலை 87 கி.மீ அருகில் உள்ள கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்வதற்கு கோட்ட அதிகாரிகள் எதிர்ப்பு தெருவிக்கின்றனர். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்திலிருந்து பல்வேறு ரெயில்கள் கேரளத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. அவைகளில் குறிப்பாக மங்களுர் - நியுடில்லி ரெயிலை எர்னாகுளம் வரையிலும், மங்களுர் - பெங்களுர் ரெயிலை கண்ணூர் வரையிலும், கோவை - பெங்களுர் பகல்நேர ரெயிலை எர்னாகுளம் வரையிலும், சென்னை - கோவை ரெயில் மங்களுர் வரையிலும் கேரளா பயணிகளுக்காக கடந்த காலங்களில் நீட்டிப்பு செய்யபட்டுள்ளன. இதைபோல் தெற்கு ரயில்வே பொது மேலாளராக தாமஸ் வர்கீஸ் இருந்த காலத்தில் சென்னையிலிருந்து வடஇந்தியாவுக்கு இயக்கபட்ட பல்வேறு ரயில்கள் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்யபட்டன. ஆனால் இன்றுவரை திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக உருப்படியாக பரசுராம் ரயிலை தவிர எந்த ஒரு ரயிலும் நீட்டிப்பு செய்ததாக வரலாறு இல்லை. அதையும் மீறி நீட்டிப்பு செய்தால் அந்த ரயில் சுற்றுப் பாதையில் செல்வதாக இருக்கும் அல்லது நடு இரவு இயங்கும் ரயிலாக இருக்கும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து ரயில்களையும் கேரளாவுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டுமாம்! ஆனால் கேரளாவில் உள்ள எந்த ரயிலும் மற்ற பகுதிகளுக்கு நீட்டிப்பு செய்யபடமாட்டாதாம்!! எவ்வளவு குறுகிய மனபான்மை?! 

9) இயங்கிகொண்டிருக்கும் ரயில்களை மாற்றி இயக்க துடிக்கும் கோட்ட அதிகாரிகள்:
      கடந்த 2012-ம்ஆண்டு ஜுலை மாதம் ரயில் கால அட்டவணையில்   திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி, குருவாயூர் - சென்னை, புனலூர் - மதுரை பயணிகள் ரயில் ஆகிய மூன்று ரயில்களை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் அதாவது கோட்டார் ரயில் நிலையம் வராமல் இயக்க ஜுலை மாதம் வெளியிடப்படும் ரயில்கால அட்டவணையில் அறிவித்து இயக்க திட்டம் போட்டார்கள். இதை எதிர்த்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம், அனைத்து ரயில் நிலைய பயணிகள் சங்கங்கள், பல்வேறு அமைப்புகள், குமரி எம்.பி ஹெலன் டேவிட்சன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம் அறிவித்து கடந்த ஆண்டு திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகளின் தமிழகத்துக்கு எதிரான இந்த திட்டத்தை முறியடித்தனர். இவ்வாறு குமரி மற்றும் நெல்லை மாவட்ட ரயில் பயணிகளை  திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் வேண்டும் என்றே அவதிக்குள்ளாக்கும் திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

10) கேரளாவில் இயங்கும் ரயில்களை பராமரிக்கும் நிலையம்:
         திருவனந்தபுரம் கோட்டத்தில் திருவனந்தபுரம், ஆலப்புளா, பணிமனைகளில் பராமரித்து வந்த பயணிகள் ரயில் பெட்டிகளை தற்போது நாகர்கோவில் பணிமனைக்கு பராமாரிப்புக்கு என தள்ளிவிட்டிருக்கின்றனர். இந்த ரயில்கள் தற்போது நாகர்கோவில் ரயில் நியைத்தில் உள்ள இரண்டு பிட்லைக்களில் தினசரி இரவு நேரங்களில் இந்த ரயில்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களை மீண்டும் பழையபடி திருவனந்தபுரம், ஆலப்புள பணிமனைகளில் பராமரிக்கபட வேண்டும். குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் படியாக இயக்கப்படும் ரயில்களை மட்டுமே இங்கு பராமரிக்கப்பட வேண்டும்.

11) காலி ரயில்பெட்டிகள் அதிக அளவில் நிறுத்தம்
    தெற்கு ரயில்வே மண்டலத்திலேயே சென்னை சென்ட்ரல்க்கு அடுத்து அதிகமாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில்  ரயில்களின் காலிபெட்டிகள் அதிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளன. இதை மாற்றுவதற்கு  ரயில்வே நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  கீழே குறிப்பிட்டுள்ள  ரயில்கள் தற்போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பாராமரிப்பு பணி உட்பட அதிக நாட்கள் காலியாக நிறுத்திவைக்கபடும் ரயில்கள் ஆகும்.

1) திருபுகர் - கன்னியாகுமரி ஸ்ரீ  75.00  மணி நேரம்
2) நகர்கோவில் -காந்திதாம் ஸ்ரீ  56.00 மணி நேரம்
3) நாகர்கோவில் - சாலிமார் ஸ்ரீ  40.00 மணி நேரம்
4) கன்னியாகுமரி – நிசாமுதீன் ஸ்ரீ 58.00 மணி நேரம்

12) நாகர்கோவில் ரயில் நிலையத்தில் அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துக்கள்:
       நாகர்கோவில்  சந்திப்பு ரயில் நிலையத்தில் சமீபத்தில் மூன்று விபத்துக்கள் நடந்துள்ளன.  இந்த விபத்துகள் நடக்க முக்கிய காரணம் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையம் தொடர்ந்து புறக்கணிக்கபடுவதே ஆகும். ரயில் பெட்டிகளை பாராமரிக்கும் பணிக்கு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்வே ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. பல ரயில்கள் நாகர்கோவில் ரயில்நிலையத்தில் காலியாக நிற்பதால் இடநெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

13) சந்திப்பு ரயில் நிலையசாலை வாகனங்கள் செல்ல தடை:-
    நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் செல்லும் சாலையை சரிசெய்து சீரமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் ரயில்வே நிர்வாகம் இந்த சாலையை சரி செய்யாமல் கனரக வாகனங்கள் செல்ல தடை ஏற்படுத்தி மாதங்கள் பல ஆகியும் சாலையும் சரி செய்யாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவே ரயில்வே நிர்வாகம் உள்ளது.  தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் உள்ள ஏ பிரிவு ரயில் நிலையமான நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தான் இந்த நிலமை. இதைப்போன்ற நிலமை வேறு எந்த ஒரு ரயில் நிலையத்திலும் கிடையாது.

14) சந்திப்பு ரயில் நிலையம் வராமல் இயங்கும் ரயில்களை மாற்றி இயக்க வேண்டும்
     திருநெல்வேலி – பிலாஸ்பூர் வாராந்திர ரயில் 13 பெப்ரவரி 2009-ம் ஆண்டு தாக்கல் செய்த ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் திருநெல்வேலி -  ஹாப்பா வாரத்துக்கு இரண்டு நாள் ரயில் அதே ஆண்டு ஜுலை 03 தேதி அன்று  தாக்கல் செய்த ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இன்று வரை நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் வழியாக இந்த இரண்டு ரயில்களும் இயங்கி கொண்டிருக்கிறது. இவ்வாறு இயங்கிகொண்டிருக்கும் இந்த ரயில்களை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வழியாக இயக்க வேண்டும்.

15) கன்னியாகுமரியில் புதிதாக  ரயில் முனையம் அமைத்தல்:
   இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில் இயக்கபட வேண்டும். தற்போது கன்னியாகுமரியிலிருந்து இயக்கபடும் ரயில்கள் தண்ணீர் நிரப்புவதற்கும், பராமரிப்புக்காகவும் காலியாக நாகர்கோவில் வருகிறது. இதனால் ரயில்வேதுறைக்கு ஆண்டுக்கு கோடிகணக்கில் நஷ்டம் எற்படகிறது. உடனடியாக கன்னியாகுமரி ரயில் நிலையத்தை புதிய ரயில் முனையமாக மாற்றி புதிதாக மூன்று பிட்லைன்களும் சுமார் பத்து காலி ரயில்பெட்டிகளை நிறுத்திவைக்கும் ஸ்டேபளிங் லைன்கள் போர்கால நடவடிக்கையாக அமைக்க வேண்டும். இந்;த வசதிகள் அமைத்தால் மட்டுமே இந்தியாவின் கடைசி எல்லையான கன்னியாகுமரியிலிருந்து அனைத்து மாநில தலைநகரங்களுக்கு புதிய தினசரி ரயில்கள் இயக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.

16) ரயில்களுக்கு நிறுத்தம் மறுப்பு:-
   நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் குழித்துறை(மார்த்தாண்டம்) மற்றும் வள்ளியூர் ஆகும். இந்த ரயில் நிலையங்களில்; இவ்வழியாக இயங்கும் சூப்பர் பாஸ்டு ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை இது வரை நிறைவேற்றபடவில்லை. இதைபோல் இரணியல், ஆரல்வாய்மொழி, நான்குநேரி ரயில் நிலையங்களில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்லவேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றபடவில்லை. ஆனால் கேரளாவில் இயங்கும் அனைத்து சூப்பர் பாஸ்டு ரயில்களும் பயணிகள் ரயில் போன்று அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல விதத்தில் இயக்கபடுகிறது. இந்த ரயில்கள் முக்கியத்துவமில்லாத நிலையங்களில் கூட நின்று செல்கின்ற வினோதம் கேரளாவில் நடந்து வருகிறது.

17) புதிய ரயில் நிலையங்கள்:-
        குமரி மாவட்டத்தில்  சாமிதோப்பு, பார்வதிபுரம், தெங்கன்குழி போன்ற பகுதிகளில் புதிய ரயில் நிலையம் அமைக்கபட வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றபடவில்லை. ஆனால் கேரளாவில் கடந்த காலங்களில் புதிய பல்வேறு ரயில்நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

18) மூடப்பட்ட ரயில் நிலையங்கள்:-
   கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரயில் வழித்தடங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள நிலையில் தென்தாமரைகுளம், அகஸ்தீஸ்வரம், காவல்கினறு போன்ற இடங்களில் இருந்த ரயில்நிலையங்களை மூடிவிட்டனர் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள். இந்த ரயில் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

19) பகல் ஒன்பது மணிநேரம் எந்த ஒரு தினசரி ரயிலும் இல்லை:-
   நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி மார்க்கம் காலையில் தினசரியாக செல்லதக்க வகையில் 07:10 க்கு நாகர்கோவில் - கோவை பகல்நேர பயணிகள் ரயில் உள்ளது. இதைவிட்டால் மாலை 04:25 மணிக்கு நாகர்கோவில் - பெங்களுர் ரயில் மட்டுமே உள்ளது. இந்த தடத்தில் பகல் 9 மணி நேரத்துக்கு ஒரு தினசரி ரயில் கூட இல்லை. மறுமார்க்கமும் இதே நிலைதான். பலகோடிகள் செலவு செய்து ரயில்பாதை அமைத்து ரயில் இயக்கப்படாமல் இருப்பது எந்த காரணத்துக்காக ரயில் இயக்கப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறவில்லை. ஆனால் மதுரை கோட்டத்தில் கீழ் உள்ள திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு பகல் நேரத்தில் தினசரி நான்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதைப்போல் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு தினசரி நான்கு பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும்.

20) கிராசிங் நிலையங்களை அதிகரித்தல்:-
     பள்ளியாடி, தென்தாமரைகுளம், நாகர்கோவில் டவுண், நாகர்கோவில் - தோவாளை இடையே புதிய கிராசிங் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கோட்ட அதிகாரிகள் இந்த கோரிக்கைகளை கண்டு கொள்வதே கிடையாது. இந்த ரயில் நிலையங்களில் கிராசிங் வசதி இல்லாத காரணத்தால் ரயில்கள் நாகர்கோவில் சந்திப்பு ரயில்நிலையத்துக்கு புறநகர் பகுதியில் அதிக நெரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு இந்த மூன்று ரயில் நிலையங்களையும் கிராசிங் நிலையமாக மாற்ற வேண்டும். 

21) வேண்டும் என்றே கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள்
     கேரளத்தில் அமையப்பெற்ற ரயில் பாதைகளில் பெரும்பாலனவைகள் இருவழித் தடங்களாக மாற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ஒரு சில பாதைகளும் தற்போது இருவழித்தடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழக பகுதிகளான திருவனந்தபுரம் - கன்னியாகுமரி (87கி.மீ) நாகர்கோவில் - மதுரை (230கி.மீ) வழித்தடங்களை இரு வழிப் பாதைகளாக மாற்றுவதற்கு நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் இதுகாலும் எடுக்கப்படவில்லை. இதுபோன்று கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி. ராமநாதபுரம் வழியாக கிழக்கு கடற்கரை புதிய ரயில்பாதை திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு 2008 -09 ரயில்வே நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியும் அதில் இன்றுவரை முன்னேற்றம் இல்லை. இந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

22) மதுரை கோட்டத்துடன் இணைத்தல்
           இந்நிலையை சீர் செய்ய ரயில் பயணிகள் இணைந்து சங்கம் அமைத்தார்கள். சங்கங்கள் மற்றும் பொது தொண்டு நிறுவனங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. குமரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு நடைமேடை மாற்றத்துக்கு எடுத்த முயற்சி கூட தோல்வியில் முடிந்தது. திருவாங்கூர் - கொச்சி பகுதிகயில் உள்ள தமிழக பகுதிகளை பிரித்து தமிழகத்துடன் இணைக்க வேண்டிய கால கட்டம் வந்தது போல குமரி மாவட்ட ரயில் நிர்வாகத்தை கேரளாவிலிருந்து பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. தென்தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள், பயணிகள் சங்கங்களும், தொண்டு நிறுவனங்கள் என  அனைவரும் சேர்ந்து குழு அமைத்து ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரிய அதிகாரிகளை சந்தித்து இது குறித்து போர்கால நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். இணைந்து போராடாமல் எதுவும் நடக்கப் போவதில்லை. 


1. தெற்கு ரயில்வே மண்டலம் - 16-05-1956
2. மதுரை கோட்டம் - 16-05-1956
3. மதுரை – திருச்சி புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 1-09-1875
4. மதுரை – தூத்துக்குடி புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 01-01-1876
5. மணியாச்சி - திருநெல்வேலி புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 01-01-1876
6. திருநெல்வேலி – கள்ளிடைக்குறிச்சி புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை -01-06-1902
7. கள்ளிடைக்குறிச்சி – செங்கோட்டை புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை -01-08-1903
8. புனலூர் - கொல்லம் புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 01-06-1904
9. செங்கோட்டை – புனலூர் புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 26-11-1904
10. கொல்லம் - சாக்கை புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 01-01-1918
11. சாக்கை – திருவனந்தபுரம் சென்ட்ரல் புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 4-11-1931
12. திருநெல்வேலி – திருசெந்தூர் புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 24-02-1923
13. விருதுநகர் - தென்காசி புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை – 30-06-1927
14. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் புதிய அகல ரயில்பாதை – 15-04-1979
15. எர்ணாகுளம் - கொல்லம் புதிய மீட்டர் கேஜ் ரயில்பாதை –01-01-1958
16. திருவனந்தபுரம் கோட்டம் - 02-10-1979
17. திருநெல்வேலி – நாகர்கோவில்  புதிய அகல ரயில்பாதை -08-04-1981
18. மதுரை – தூத்துக்குடி மீட்டர் கேஜ் பாதை அகலபாதையாக மாற்றம் - 21-10-1993
19. மணியாச்சி - திருநெல்வேலி மீட்டர் கேஜ் பாதை அகலபாதையாக மாற்றம் - 21-10-1993
20. எர்ணாகுளம் - திருவனந்தபுரம்; மீட்டர் கேஜ் பாதை அகலபாதையாக மாற்றம் –13-09-1976

குமரி மாவட்டத்தின் ரயில்வே வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய கோரிக்கைகள்;

            கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தமிழகத்தின் அதிக கல்வியறிவு நிறைந்த மாவட்டம் ஆகும். இங்கு அரசு, அரசு சாந்ந்த அல்லது தனியார் தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத காரணத்தால் இங்கு உள்ள மக்கள் வெளிஊர்களில் வேலைபார்ப்பது என்பது இந்த மாவட்டத்தின் உள்ள மக்களின் தவிர்க்க முடியாதநிலை ஆகும். குமரி மாவட்ட பயணிகள் திருநெல்வேலி,மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு வேலைவாய்ப்பிற்காகவும், மேற்கல்விக்காகவும், வணிக சம்மந்தமாகவும் தினசரி ஆயிரகணக்காகவர்கள் பயணிக்கின்றனர். தலைமை செயலகம், உயர்கல்வி, பல்கலைகழகங்கள், அரசு அலுவல் சர்ந்த அனைத்து பணிகளும் என சென்னைக்கும்,  மதுரையில் உயர்நீதி மன்றம், வேலைவாய்ப்பு அலுவலகமும்,  திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பல்கலைகழகம் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு தினசரி நூற்றுகணக்காக பயணிகள் பயணிக்கின்றனர். இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ரயில் வசதி என்பது மிகவும் அத்தியவாசியமான கோரிக்கை ஆகும். புதிய ரயில்கள் விடுதல் போன்ற பல்வேறு ரயில்வே வளர்ச்சி பணிகள் என்பது இந்த மாவட்டத்தின் மொத்த வளர்;சியாக கருதப்படுகிறது. குமரியிலிருந்து ஓர் ரயில் இயக்கப்பட்டால் இந்த ரயில்தான் தமிழகத்தின் முக்கிய அனைத்து நகரங்களையும் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி) இணைத்து அனைத்து மக்களுக்கும் நேரடியாக பயன்படும் படியாக இருக்கிறது. 

புதிய ரயில்கள்:-
1. நாகர்கோவில் - சென்னை வழி மதுரை புதிய முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட தினசரி ரயில் இயக்க வேண்டும்.
2. கன்னியாகுமரி – ஐதராபாத் வழி மதுரை, திருவண்ணாமலை, திருப்பதி தினசரி சூப்பர்பாஸ்டு ரயில் இயக்க வேண்டும்.
3. கொச்சுவேலியிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணி மற்றும் காரைக்காலுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்.
4. கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம், மங்களுர் வழியாக கோவாவிற்கு புதிய தினசரி சூப்பர்பாஸ்டு ரயில் இயக்க வேண்டும்.

ரயில்கள் நீட்டிப்பு:-
5. திருச்சி – திருநெல்வேலி  இன்;;டர்சிட்டி ரயில் நாகர்கோவில் வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
6. திருவனந்தபுரம் - மங்களுர் 16603ஃ16604 மாவேலி ரயில் கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
7. கொச்சுவேலி – மும்பை 22114ஃ 22113 வாரத்துக்கு இரண்டுநாள் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்;
8. நாகர்கோவில் - மங்களுர் 16605ஃ16606 ஏரநாடு ரயிலை கோவா வரை நீட்டிப்பு செய்து கன்னியாகுமரி – கோவா ரயிலாக இயக்க வேண்டும்.

சேவைகள் அதிகரித்து இயக்குதல்:-
1. கன்னியாகுமரி – நிசாமுதீன் 12641ஃ12642 திருக்குறள் வாரத்துக்கு இரண்டுநாள் ரயில் தினசரி ரயிலாக மாற்றி இயக்குதல்
2. கன்னியாகுமரி – புதுச்சேரி 16861ஃ16862 வாராந்திர ரயில் தினசரி ரயிலாக மாற்றம்
3. கன்னியாகுமரி - ஹவுரா 12665ஃ12666 வாராந்திர ரயில் வாரத்துக்கு மூன்று நாள் ரயிலாக மாற்றி இயக்குதல்
4. நாகர்கோவில் - சென்னை எழும்பூர் 12667ஃ12668  வாராந்திர ரயில் தினசரி ரயிலாக மாற்றம்
5. நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் 12689ஃ12690 வாராந்திர ரயில் தினசரி ரயிலாக மாற்றம்
6. கன்னியாகுமரி – ராமேஸ்வரம் 22622ஃ22621 வாரத்துக்கு மூன்றுநாள் ரயில் தினசரி ரயிலாக மாற்றம்

கேரளா வழியாக சுற்றி செல்லும் ரயில்களுக்கு பதிலாக குறைந்த தூரம் கொண்ட வழித்தடம் வழியாக ரயில்கள் இயக்குதல்
1. சென்னை சென்ட்ரல் – பிலாஸ்பூர் 12852ஃ12851   வாராந்திர ரயில் மதுரை வழியாக நாகர்கோவில் வரை நீட்டிப்பு
2. சென்னை சென்ட்ரல் - சாலிமர் 22826ஃ22825  வாராந்திர ரயில் மதுரை வழியாக நாகர்கோவில் வரை நீட்டிப்பு
3. சென்னை எழும்பூர் - திப்ருகர் 15929ஃ15930  வாராந்திர ரயில் மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு
4. திருநெல்வேலி – ஜம்முதாவி 16787ஃ16788 வாரத்துக்கு இரண்டுநாள் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு
5. கன்னியாகுமரி – மும்பை 16381ஃ16382 தினசரி ரயிலை மங்களுர், கோவா வழியாக மாற்றி இயக்குதல்
பயணிகள் ரயில் மற்றும் மெமு ரயில்கள்:-
1. திருநெல்வேலி – கொல்லம் வழி நாகர்கோவில் புதிய தினசரி மெமு ரயில் 
2. கன்னியாகுமரி – கொல்லம் புதிய தினசரி மெமு ரயில் 
3. கொச்சுவேலி – தூத்துக்குடி பயணிகள் ரயில் வழி நாகர்கோவில், திருநெல்வேலி
4. கொச்சுவேலி – திருசெந்தூர் பயணிகள் ரயில் வழி நாகர்கோவில், திருநெல்வேலி
5. கொச்சுவேலி – செங்கோட்டை பயணிகள் ரயில் வழி நாகர்கோவில், திருநெல்வேலி
6. திருவனந்தபுரம் - திருநெல்வேலி பயணிகள் ரயில் வழி நாகர்கோவில்
7. திருவனந்தபுரம் - மதுரை பகல்நேர பயணிகள் ரயில் வழி நாகர்கோவில்

திட்டங்கள்
1. கன்னியாகுமரி – மதுரை ரயில்பாதையை இருவழிப்பாதையாக போர்கால நடவடிக்கையாக மாற்ற வேண்டும்.
2. கன்னியாகுமரி – காரைக்குடி 462.47 கி.மீ தூரத்தில் 1965.763 கோடிகள் திட்ட மதிப்பீட்டில் உள்ள திட்டமான கிழக்குகடற்கரை ரயில்பாதையை அமைக்க வேண்டும்.
3. ஆளுர் - நாகர்கோவில் - செட்டிகுளம் 24கி.மீ புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும்.
4. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் இஞ்சின் பராமரிப்பு நிலையம் (லோகோ ஷெட்) அமைக்க வேண்டும்.
5. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும்.
6. நாகர்கோவில் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிதாக மூன்று நடைமேடைகள், ஆறு ஸ்டேபளிங்லைன்கள், புதிதாக இரண்டு பிட்லைன்கள் அமைக்க வேண்டும்.
7. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பெட்டிகளை பழுதுபார்க்கும் பனிமனையை ஒரே நேரத்தில் அதிக அளவில் ரயில்பெட்டிகள் நிறுத்தி பராமரிக்கும் அளவிற்கு விரிவாக்கம் செய்ய வேண்டும்.
8. கன்னியாகுமரி ரயில் நிலையத்தை  விரிவாக்கம் செய்து அதிக அளவில் புதிய நடைமேடைகள், ஸ்டேபளிங்லைன்கள், பிட்லைன்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9. குமரி மாவட்டத்தில் ஒழுகினசேரி, சாமிதோப்பு, பார்வதிபுரம், தெங்கன்குழி போன்ற இடங்களில் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க வேண்டும்.
10. பள்ளியாடி, தென்தாமரைகுளம், தோவாளை ரயில் நிலையங்களை கிராசிங் நிலையமாக மாற்ற வேண்டும்.
11. பாறசாலை, குழித்துறை, இரணியல், ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களை மூன்று தண்டவாளங்கள் கொண்ட கிராசிங் நிலையமாக மாற்ற வேண்டும்.
12. வீராணிஆளுர் ரயில் நிலையத்தில் புதிதாக ரயில்களை நிறுத்தி வைப்பதற்கு ஸ்டேபளிங் லைன்கள் அமைக்க வேண்டும்.
13. நாகர்கோவில் டவுண்  ரயில்நிலையத்தில் குட்செட் அமைக்க வேண்டும்.
14. கோட்டத்தை மாற்றுதல்

      கடைசி மற்றும் மிகமுக்கிய கோரிக்கையாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட ரயில்வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் மாற்றினால் மட்டுமே இந்த பகுதிகள் ரயில்வேத்துறையில் வளர்ச்சி பெறும். மேலே குறிப்பிடப்பட்டள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால் முதலில் கோட்டம் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இவ்வாறு இணைத்தால் மட்டுமே இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். திருவனந்தபுரம் கோட்டத்தில் இருக்கும் வரை மலையாள அதிகாரிகள் குமரி மாவட்ட வளர்ச்சிக்கு என எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றமாட்டார்கள். மதுரை கோட்டத்துடன் மாற்றினால் மட்டுமே இந்த பகுதிக்கு விடிவுகாலம் பிறக்கும். ஆகவே முதலில் மதுரை கோட்;டத்துடன் மாற்றிவிட்டு அடுத்ததாக குமரி மாவட்ட வளர்ச்சிக்கு மிக எளிதாக திட்டங்களை செயல்படுத்த முடியும்.

              நாம் இந்தியாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால், ரயில் போக்குவரத்து எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அதைச் சார்ந்தே அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியும் காணப்படுகிறது. தண்டவாளம் இல்லாத தாலுகாவே இல்லை என்கிற நிலையைத் தமிழகம் எப்போது அடையப் போகிறது என்பதைப் பொருத்துதான் நமது பொருளாதார வளர்ச்சி அமையும்!








குமரிக்கு ரயில் வந்து 35 ஆண்டுகள் முடிந்து விட்டது. கோட்டம் மாறினால் விடிவுகாலம் பிறக்குமா? Reviewed by NEWMANNAR on April 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.