போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட இரு இளைஞர்கள் கைது
போலி நாணயத்தாள்கள் அச்சிட்டு அவற்றை விநியோகம் செய்தது தொடர்பில் இரு இளைஞர்களை மாதம்பை பொலீஸார் சிலாபம் முகுதுவட்டவன பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் வசம் இருந்த 2 அச்சிடப்பட்ட போலி 1000 ரூபா நாணயத்தாள்கள் (s/6178122),அச்சிட பயன்படுத்திய கணணி இயந்திரம் என்பனவற்றை பொலீஸார் மீட்டுள்ளனர்.
இந்த போலி நாணயத்தாள் அச்சிட்ட பிரதான சந்தேக நபர் சிலாபம் முகுதுவட்டவன பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் எனவம்,ஏனைய பொருட்கள் கைப்பற்றப்பட்டது
பிரஸ்தாப நபரினது வீட்டில் இருந்தே எனவும் பொ தான் ரூபா 1000,2000 நாணயத்தாள்களை அச்சிட்டதாகவும் அந்த பணத்தை இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக வழங்கப்பட்டுவந்ததாகவும் பொலீஸாரிடம் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
மாதம்பை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசன்ன ஜயலால் தலைமையிலான பொலீஸார் இந்த சுற்றி வளைப்பினை செய்தனர்.
போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட இரு இளைஞர்கள் கைது
Reviewed by NEWMANNAR
on
April 14, 2014
Rating:

No comments:
Post a Comment