பண்டிகை காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை குறைப்பு
பண்டிகை காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 35 வீதத்தினால் மீன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடக செயலாளர் நரேந்திர ராஜபக்ஸ தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பேலியகொட பொது மீன் சந்தைக்கு வரும் மீன்களின் தொகை அதிகரித்துள்ளமையால் கடற்றொழில் அமைச்சினால் மீன்களுக்கான விலை குறைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விபனையாளர்கள் நுகர்வோர்களுடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடியே இவ்வாறான தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாகவும் நரேந்திர ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
மீன்களின் விலை குறைப்பு காரணமாக விற்பனையாளர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை எனவும் அவர் கூறினார்.
குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இம்முறை மீன்பிடிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் ஊடக செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை குறைப்பு
Reviewed by NEWMANNAR
on
April 12, 2014
Rating:

No comments:
Post a Comment