பகல் வேளையிலும் மோட்டார் சைக்கிள் பிரதான விளக்குகளை ஒளிரச் செய்யுமாறு உத்தரவு
இன்றுமுதல் பகல் வேளைகளில் மோட்டார் சைக்கிள்களின் பிரதான விளக்குகளை ஒளிரச் செய்யுமாறு நாடளாவிய ரீதியில் மோட்டார் சைக்கிள் சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கடந்த காலப்பகுதிக்குள் மோட்டார் சைக்கிள் விபத்துகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையால் வீழ்ச்சியடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
கடந்த வருடத்தின் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் இரண்டு மாதங்களுக்குள் 820 உயிராபத்துடைய மற்றும் பாரதூரமான மோட்டார் சைக்கிள் விபத்துகள் பதிவாகியிருந்தன.
ஆயினும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 670 விபத்துகளே பதிவாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பகல் வேளையிலும் மோட்டார் சைக்கிள் பிரதான விளக்குகளை ஒளிரச் செய்யுமாறு உத்தரவு
Reviewed by NEWMANNAR
on
April 11, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment