போலியோவை முற்றாக இல்லாதொழித்த நாடாக இலங்கை பிரகடனம்
போலியோ வைரஸை முற்றாக இல்லாதொழித்த நாடாக, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான சான்றிதழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நேற்று நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் இலங்கை உட்பட 11 நாடுகள் போலியோ வைரஸை இல்லாதொழித்த நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
1944 ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது போலியோ நோயாளர் பதிவானதுடன், அந்த வருடத்தில் போலியோவினால் நால்வர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், 1990 ஆம் ஆண்டின் பின்னர், இலங்கையில் எந்தவொரு போலியோ நோயாளியும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
போலியோவை முற்றாக இல்லாதொழித்த நாடாக இலங்கை பிரகடனம்
Reviewed by NEWMANNAR
on
April 09, 2014
Rating:

No comments:
Post a Comment