அண்மைய செய்திகள்

recent
-

பஸ்கட்டண அதிகரிப்புக்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் முஸ்தீபு

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ள பஸ் கட்டணத்தை 10 சதவீத அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

 பஸ் கட்டணம் தொடர்பான தேசிய கொள்கையின் படி வருடாந்த பஸ்கட்டன அதிகரிப்பு ஜூலை முதலாம் திகதி அமுலுக்கு வருமென தெரிவிக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கெமுனு விஜயரட்ண பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக ஆராய்ந்து ஜூன் மாதம் எவ்வளவு கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்படுமெனவும் தெரிவிக்கின்றார். 

 பஸ் வண்டிகளின் விலை அதிகரிப்பு, எஞ்சின் எண்ணை விலை அதிகரிப்பு, சேவை கட்டணங்கள் அதிகரிப்பு, மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் வீதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு போன்றவற்றை கருத்திற் கொண்டு பஸ் கட்டண அதிகரிப்பு வீதம் நிர்மாணிக்கப்படுமெனவும் கெமுனு விஜயரட்ண தெரிவித்தார்.
பஸ்கட்டண அதிகரிப்புக்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் முஸ்தீபு Reviewed by NEWMANNAR on April 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.