வடக்கில் தமிழரின் இருப்பை நிலை நிறுத்த கல்வியும் சுகாதாரமும் அவசியமானவை:வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வலியுறுத்தல்
வட மாகாணத்தில் யுத்த காலத்திற்குப் பின்னர் இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களுடைய இருப்பைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.வடக்கில் எங்களுடைய இருப்பை மீண்டும் நிலைநிறுத்துவதற்குக் கல்வி,சுகாதாரம் இரண்டும் அவசியமானது.
இவ்வாறு வலியுறுத்தல் விடுத்தார் வடக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சத்தியலிங்கம். தெல்லிப்பழை துர்க்காதேவி கிராம ஆயுர்வேத வைத்தியசாலையின் திறப்பு விழா அண்மையில் இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு வைத்தியசாலைக் கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்திலுள்ள மூன்று ஆயுர்வேத வைத்தியசாலைகளில் முக்கியத்துவம் மிக்கதாக தெல்லிப்பழையில் துர்க்காதேவி கிராமிய ஆயுர்வேத வைத்தயிசாலை இன்று திறக்கப்பட்டிருக்கிறது.
சுதேச மருத்துவம் என்பத மூத்தோர்கள் எமக்காக விட்டுச் சென்ற சொத்து.இயற்கை மருத்துவத்தை எக்காலகட்டத்திலும் நாம் அழியவிடக்கூடாது.
எமது எதிர்காலச் சந்ததிக்கு அதனை எடுத்துச் செல்வது எமது கடமை.நாங்கள் இயஙற்கைக்கெதிராகச் செயற்பட்டதால் தான் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளோம்.
ஆகவே இதனை உணர்ந்து எமது முன்னோர்களின் இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்வை மீண்டும் வாழ்வை மீண்டும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.நாங்கள் எல்லோரும் எங்களுடைய சமூதாய எழுச்சிக்காகப் பாடுபட வேண்டும்.
நாங்கள் வடமாகாண சபையில் 10 ஆண்டு அபிவிருத்தி மூலோபாயத் திட்டமொன்றை முன்னெடுத்திருக்கிறோம்.அதிலும் குறிப்பாகச் சுதேச வைத்தியத்தில் கூடுதல் கவனம் nடிசலுத்தப்பட்டுள்ளது.
இங்குள்ள சுதேச வைத்தயத் தொண்டர்களுக்கு நிமனம் வழங்காமை குறித்து இன்றைய நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.இதற்காக என்னாலான அத்துணை முயற்சிகளையும் எடுப்பேன் என இவ்விடத்தில் உறுதியளிக்கின்றேன் என்றார்.
வடக்கில் தமிழரின் இருப்பை நிலை நிறுத்த கல்வியும் சுகாதாரமும் அவசியமானவை:வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வலியுறுத்தல்
Reviewed by NEWMANNAR
on
April 08, 2014
Rating:

No comments:
Post a Comment