இலங்கை சாம்பியன்கள் நாட்டை வந்தடைந்தனர் - வீடியோ
உலகக்கிண்ண இருபதுக்கு இருபதை வெற்றிகொண்ட இலங்கை சாம்பியன்கள் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தனர்.
தற்போது அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெறும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கை அணி வீரர்கள் கொழும்பு – நீர்கொழும்பு வீதி வழியாக, மக்களைப் பார்வையிடும் நோக்கில் ஊர்வலமாகச் செல்லவுள்ளனர்.
நீர்கொழும்பு வீதியூடாக சீதுவ, ஜா-எல, வத்தளை, பெஹலியகொட, ஒருகொடவத்த, பொரளை, பௌத்தாலோக மாவத்தை, பம்பலப்பிட்டி வழியாக காலி முகத்திடலை வந்தடையவுள்ளனர்.
இலங்கை சாம்பியன்கள் நாட்டை வந்தடைந்தனர் - வீடியோ
Reviewed by NEWMANNAR
on
April 08, 2014
Rating:

No comments:
Post a Comment