பணத்தைத் திருடிய கணவரை கொன்று வேகவைத்த கோபக்கார மனைவி!
பணத்தைத் திருடியதற்காக கணவரைக் கொலை செய்து அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி வேக வைத்த மனைவியை சிலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிலி நாட்டில் சாண்டியாவின் தென்பகுதியில் உள்ள மோலினா நகரில் வசித்து வந்த கிளவ்டியா ஆண்ட்ரியா முனூஸ் (44) என்பவரின் மனைவி ரோசன்னா ஆண்டிரியா வால்டெஸ் (38).
இங்கிலாந்தைச் சேர்ந்த ரோசன்னா தனது கணவருக்குத் தெரியாமல் வீட்டில் மரப்பெட்டி ஒன்றில் பணம் சேமித்து வந்துள்ளார்.
ஆனால், அதை எப்படியோ அறிந்துகொண்ட முனூஸ், மரப்பெட்டியில் இருந்த 9 ஆயிரம் அமெரிக்க டொலர்களை திருடிச் சென்று விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ரோசன்னா, இது தொடர்பாக முனூஸ் உடன் சண்டையிட்டுள்ளார்.
சண்டையினூடே கோபத்தில் தனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டார் ரோசன்னா.
இதில் சம்பவ இடத்திலேயே முனூஸ் பரிதாபமாகப் பலியானார். ஆனாலும், ஆத்திரமடங்காத ரோசன்னா தனது கணவரின் உடலை துண்டங்களாக்கி ஒரு பானையில் போட்டு பல மணி நேரம் வேக வைத்துள்ளார்.
பின்னர் வேகவைத்த கணவரின் உடல் பாகங்களை ஒரு நைலான் பேக்கில் போட்டு, அதனை தனது காரின் பின்புறம் வைத்து எடுத்துச் சென்று பொலிஸில் சரணடைந்துள்ளார்.
பணத்தைத் திருடிய கணவரை கொன்று வேகவைத்த கோபக்கார மனைவி!
Reviewed by NEWMANNAR
on
April 09, 2014
Rating:

No comments:
Post a Comment