மன்னாரில் புதிதாக நியமனம் பெற்ற கிராம அலுவலகர்கள் பகிர்ந்தளிப்பு
மன்னாரில் புதிதாக நியமிக்கப்பட்ட கிராம சேவையாளர்கள் பிரதேச செயலகங்களுக்கு பகிரப்பட்டிருப்பதாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றுவதற்கென சுமார் 30 கிராம அலுவலகர்கள் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கான நியமத்தினை உள்நாட்டலுவல்கள் அமைச்சு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வழங்கியிருந்தது.
புதிதாக நியமமனம் பெற்றுக்கொண்ட 30 கிராம அலுவலகர்களும் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றுவார்கள் என மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் மன்னார் பிரதேச செயலகப்பிரிவில் 09பேரும், நானாட்டான் பிரதேச செயலகப்பரிவில் 05பேரும், மடு பிரதேச செயலகப்பிரிவில் 06பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 10பேரும் கடமைகளை பொறுப்பேற்றிருக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள 153 கிராம சேவகர் பிரிவுகளில் நிலவி வந்த வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு மேற்படி 30 கிராம அலுவலகர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் புதிதாக நியமனம் பெற்ற கிராம அலுவலகர்கள் பகிர்ந்தளிப்பு
Reviewed by NEWMANNAR
on
June 16, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment