மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய காணிக்கு உரிமை கோரி வேலியடைத்த தனி நபர்-இந்து மக்கள் அதிர்ச்சி
மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய வளாகத்திற்குள் அத்தூமீறி நுழைந்த நபநொருவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோயில் தேரினை சுற்றி வேலி அமைத்துள்ள சம்பவம் மன்னார் மாவட்ட இந்து சமய மக்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக குறித்த ஆலயத்தின் பரிபாலன சபை முருங்கன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,,,
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் நகரில் குறித்த செல்வமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.சுமார் 120 வருட பழமை வாய்ந்த குறித்த கோயில் மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தளமாக புகழ் பெற்ற திருக்கேதீஸ்வர சிவன் ஆலயத்திற்கு அடுத்ததாக உள்ள மாவட்டத்தின் இரண்டாவது பெரிய கோயிலாகும்.
இந்த நிலையில் குறித்த கோயில் அமைந்துள்ள இடமும்,அதனைச் சூழவுள்ள நிலப்பரப்பும் தனக்கு சொந்தமானதென உரிமை கோரிய தனி நபர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்படி கோயில் அமைந்துள்ள நிலப்பரப்பில் ஒரு பகுதியான குறித்த கோயிலின் தேர் நிறுத்திவைக்கப்படும் காணியினை சுற்றி முட்கம்பிகளினால் சுற்று வேலியொன்றை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் நானாட்டான் சிறி செல்வ முத்து மாரியம்மன் கோயிலின் பரிபாலன சபையினர் தேரைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள குறித்த வேலியை அகற்றுமாறு வேலி அமைத்த நபரிடம் வேண்டு கோள் விடுத்துள்ள நிலையில் அவா அதற்கு இனங்க மறுத்துள்ளார்.
இந்த நிலையில் பரிபாலன சபையினர் இவ்விடையம் தொடர்பில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து முருங்கன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த கோயில் இந்து சமய கலாச்சார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கோயிலாகும்.மேலும் குறித்த கோயிலின் வருடாந்த கொடியேற்றமும், தேர்த்திருவிழாவும் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.
குறித்த வருடாந்த தேர் திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் கோயில் பரிபாலன சபையினராலும்,இந்து மக்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலே மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மேலும் கோயில் உற்சவம் இடம் பெறும் தினத்தில் தேர் இழுக்கும் வைபவமும் இடம் பெறவுள்ள நிலையில் அமைக்கப்பட்டுள்ள வேலி காரணமாக தேரினை எங்கும் நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உற்சவத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள தீ மிதிப்பு சடங்கும் நடத்த முடியாத நிலையில் ஒவ்வொரு வருடமும் நடை பெறும் தீ மிதிப்பு நிகழும் இடமும் வேலி அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி வேலி அடைப்புச் சம்பவம் காரணமாக அனைத்து இந்து மக்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் கோவில் பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய காணிக்கு உரிமை கோரி வேலியடைத்த தனி நபர்-இந்து மக்கள் அதிர்ச்சி
Reviewed by NEWMANNAR
on
June 17, 2014
Rating:

No comments:
Post a Comment