விசேட அதிரடிப் படையினர் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம்
திருகோணமலை 91ஆவது கட்டைப் பகுதியில் விசேட அதிரடிப் படைவீரர்கள் பயணித்த பஸ்சொன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
கொள்கலன் வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில், இன்று காலை 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை முகாமில் இருந்து அளுத்கம நகருக்கு விசேட பணிகளுக்காக சென்றுகொண்டிருந்த படைவீரர்களே விபத்தில் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப் படையினர் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம்
Reviewed by NEWMANNAR
on
July 31, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment