அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் பொலிசாரினால் கடற் பறவை முட்டைகளை வைத்திருந்த 4 பேர் கைது

கடற்பறவை முட்டைகள் 452 யை வைத்திருந்ததாக கூறப்படும் நால்வரை தலைமன்னார் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. மீன்பிடி படகொன்றின் மூலம் பறவை முட்டைகளை கரை எடுத்து வந்து கொண்டிருந்த போதே இவர்களை, ஊறுமலை கடற்கரையில் வைத்து சனிக்கிழமை மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 காலநிலை மாற்றங்களால் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பறந்து வரும் கடற்பறவைகளின் முட்டைகளையே இவர்கள் மறைத்து வைத்துள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இடையில் உள்ள நான்காவது மணல் திட்டு தீவில் இருந்தே இந்த முட்டைகளை தாம் எடுத்து வந்தாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். 

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை, குச்சவெளி மற்றும் தலைமன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தலைமன்னார் பொலிசாரினால் கடற் பறவை முட்டைகளை வைத்திருந்த 4 பேர் கைது Reviewed by NEWMANNAR on July 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.