நடுவானில் விபத்துக்குள்ளான அல்ஜீரிய விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
மாலியில் விபத்துக்குள்ளான அல்ஜீரியாவின் AH5017 விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
116 பேருடன் பயணித்த விமானம் கடந்த வியாழக்கிழமை அல்ஜீரிய விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பினை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்தவர்களில் 51 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து ஐ.நா நிபுணர் குழு விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதேவேளை நாளை முதல் பிரான்சில் மூன்று நாட்கள் துக்க தினம் பிரகடனப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடுவானில் விபத்துக்குள்ளான அல்ஜீரிய விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 27, 2014
Rating:

No comments:
Post a Comment