காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட மாட்டாது- ஹமாஸ்
காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட மாட்டாது என ஹமாஸ் இயக்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்த நிபந்தனை எட்டப்படும் வரை தமது இயக்கம் யுத்த நிறுத்தத்தை தொடர்ந்தும் நிராகரிக்கும் என ஹமாஸ் இயக்கத் தலைவர் காலித் மெஷால் தெரிவித்துள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் மேலதிக வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அத்துடன் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கமும் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்து வருவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் யுத்தக் குற்றம் இடம்பெற்றிருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பக்கச்சார்பானது என இஸ்ரேல் கூறியிருந்தது.
காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட மாட்டாது- ஹமாஸ்
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:

No comments:
Post a Comment