காணாமற்போனோர் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் சாட்சியமளிக்க சந்தர்ப்பம்
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் திகதியுடன் விசாரணைக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு விசாரணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆணைக்குழு முன்னிலையில புலம்பெயர் தமிழர்களும் சாட்சியம் அளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், புலம்பெயர் மக்களின் சாட்சி விசாரணைகளுக்கான அமர்வுகள் தொடர்பில் இதுவரை தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சாட்சி விசாரணை அமர்வுகளில் 19,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மெக்ஸ்வெல் பரணகம சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் சாட்சியமளிக்க சந்தர்ப்பம்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2014
Rating:

No comments:
Post a Comment