நவசக்தி இந்து இளைஞர் மன்ற வருடாந்த பொதுக்கூட்டம்
நவசக்தி இந்து இளைஞர் மன்ற வருடாந்த பொதுக்கூட்டமானது எதிர்வரும் 03.08.2014 அன்று தலைவர் மு.டினேஸ்வரன் தலைமையில் கட்டுக்கரை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ்வருடாந்த பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக தெரிவு, புதிய அங்கத்தவர்களை இணைத்தல், சங்க வளர்ச்சி பற்றி ஆராய்வு, கூட்டறிக்கை, கணக்கறிக்கை சமர்ப்பித்தல் ஆகியன இடம்பெறவுள்ளன.
எனவே மேற்படி நவசக்தி இந்து இளைஞர் மன்ற பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தினர் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி வேண்டி நிற்பதுடன் மன்னார் மாவட்டத்தின் ஆர்வமுள்ள இந்து இளைஞர்களை அங்கத்தினராக இணைந்து கொள்ள விரும்புவோர் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வண்ணம்.
நிர்வாகம்.
நவசக்தி இந்து இளைஞர் மன்ற வருடாந்த பொதுக்கூட்டம்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2014
Rating:

No comments:
Post a Comment