மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மாற்று மானியத்திட்டம் வழங்கி வைப்பு.
மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் பதிவு செய்து எரிபொருள் மானியம் பெற்ற அணைத்து மீன் பிடி படகு உரிமையாளர்களுக்கும் மாற்று மானியத்திட்டமாக வலைத்தொகுதி மற்றும் தற்பாதுகாப்பு அங்கிகள் என்பன நேற்று(11) வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருவதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 2500 மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களுக்கு முதற்கட்டமாக தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
ஒரு உரிமையாளருக்கு 1 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பெருமதியான(112000-00) வலைத்தொகுதிகள் மற்றும் 2 தற்பாதுகாப்பு அங்கிகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றது.
2008 ஆம் ஆண்டு கடற்தொழில் அமைச்சினால் மீனவர்கள் தற்பாதுகாப்பு அங்கி அணிந்தே தொழிலுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாகவே குறித்த தற்பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக மீனவர்களுக்கு வழங்குவதற்காக 5325 தற்பாதுகாப்பு அங்கிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு மாற்று மானியத்திட்டம் வழங்கி வைப்பு.
Reviewed by NEWMANNAR
on
July 11, 2014
Rating:

No comments:
Post a Comment