இந்திய மீனவர்களின் 27 படகுகள் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைப்பு.
இந்திய மீனவர்களின் 27 படகுகள் தற்போது தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் யூலை மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் வருகை தந்த மீனவர்களின் மீன்பிடி படகுகலே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் யூலை மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 143 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதே வேளை மீனவர்களின் படகுகளில் இருந்து மீட்கப்பட்ட வலைத்தொகுதிகள் உற்பட சில பொருட்கள் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் வைக்கப்பட்
டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் 27 படகுகள் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைப்பு.
Reviewed by NEWMANNAR
on
July 13, 2014
Rating:

No comments:
Post a Comment