அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம்! 7 வருடங்களுக்கு பிறகு அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தை மூடிமறைத்த அதிபரையும், ஆசிரியரையும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று ஹட்டன் நீதிமன்ற நீதமான் அமில ஆரியசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த 2007.11.12 திகதி ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கடவளை தமிழ் வித்தியாலயத்தில் மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். 


 இந்த சம்பவத்தை மேற்படி தற்போது கடமையாற்றும் நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரும், செனன் தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரும் மூடிமறைக்க முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்பவம் நடந்து ஏழு வருடத்தின் பிற்பாடு ஹட்டன் பொலிஸாருக்கு ஹட்டன் நீதிமன்ற நீதமான் அமில ஆரியசேன உத்திரவிட்டுள்ளார். 

 இருவரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அதன் பின் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என ஹட்டன் நீதிமன்ற நீதமான் அமில ஆரியசேன தெரிவித்துள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு எதிராக நுவரெலியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
பாடசாலை மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம்! 7 வருடங்களுக்கு பிறகு அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல் Reviewed by NEWMANNAR on July 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.