புறப்பட்ட 3 நிமிடத்தில் விமானம் விபத்து
ஜேர்மனியில் விமானம் ஒன்று புறப்பட்ட வேகத்தில் விபத்திற்குள்ளானதால் இரண்டு நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஜேர்மனியை சேர்ந்த இரண்டு விமானிகள் நேற்று பிரெமென் விமான நிலையத்தில் இருந்த பயிற்சி விமானத்தை ஓட்டி சென்றுள்ளனர்.
அப்போது திடீரென அந்த விமானம் அருகிலிருந்த கிடங்கு ஒன்றில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் விபத்துக்குள்ளான இந்த விமானத்தில், பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்ததுடன், இருவரின் சடலங்களையும் மீட்டு சென்றுள்ளனர்.
புறப்பட்ட 3 நிமிடத்தில் விமானம் விபத்து
Reviewed by NEWMANNAR
on
August 04, 2014
Rating:

No comments:
Post a Comment