அண்மைய செய்திகள்

recent
-

செவ்வாயில் ஒட்சிசனை உருவாக்க தயாராகும் புதிய ரோவர் விண்கலம்

2021 ஆம் ஆண்டில் செவ்­வாய்க்­கி­ர­கத்தில் தரை­யி­றங்­க­வுள்ள நாசா விண்­வெளி ஆராய்ச்சி நிலை­யத்தின் புதிய ரோவர் விண்­க­ல­மா­னது அந்தக் கிர­கத்தின் மேற்­ப­ரப்பில் ஒட்­சி­சனை உரு­வாக்கும் முயற்­சியில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. 

 எதிர்­கா­லத்தில் செவ்­வாய்க்­கி­ர­கத்­திற்கு மனி­தர்கள் செல்­வதை சாத்­தி­ய­மாக்கும் வகையில் அந்தக் கிர­கத்தில் 7 விஞ்­ஞான செயற்­றிட்­டங்­களை அந்த ரோவர் விண்­கலம் முன்­னெ­டுக்­க­வுள்­ள­துடன் செவ்வாய்க் கிர­கத்­தி­லான உயிர் வாழ்க்­கைக்­கான ஆதா­ரங்கள் குறித்து தீவிர ஆராய்ச்­சியை மேற்­கொள்­ள­வுள்­ளது. 

 இதபோது மேற்­படி விண்­கலம் செவ்வாய்க்கிர­கத்தில் செல்­வாக்குச் செலுத்தும் காப­னீ­ரொட்­சைட்டு வாயுவை ஒட்­சி­ச­னாக மாற்றும் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­ட­வுள்­ளது. இது அங்கு மனி­தர்கள் வாழ்­வதை சாத்­தி­ய­மாக்­கு­வ­துடன் அக்­கி­ர­கத்­துக்கு பய­ணத்தை மேற்­கொள்ளும் ஏவு­க­ணைகள் மீளப் பூமிக்கு திரும்பும் நட­வ­டிக்­கைக்­காக எரி­பொ­ருளைப் பெறு­வ­தற்கும் வழி­வகை செய்யும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

 மேலும் அந்த ரோவர் விண்கலம் இரு புகைப்படக் கருவிகள், காலநிலை பரி சோதனை உபகரணம் என்பனவற்றை உள்ள டக்கியிருக்கும் என கூறப்படுகிறது.
செவ்வாயில் ஒட்சிசனை உருவாக்க தயாராகும் புதிய ரோவர் விண்கலம் Reviewed by NEWMANNAR on August 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.