அண்மைய செய்திகள்

recent
-

ஏழே நாட்களில் அழகு தேவதையாய் ஜொலிக்க...........

அனைவருக்குமே நல்ல வெள்ளையாகவும், மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றத்துடனும் இருக்க வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும்.
இதற்காக எத்தனையோ அழகு பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள், பணம் செலவழித்து கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதை விட இயற்கையான பொருட்களை பயன்படுத்தினாலே அழகா வலம் வரலாம்.

முகத்தை கழுவுதல்

முகம் எப்போதுமே பொலிவுடன் இருக்க, முகத்தை கழுவுவது என்பது மிக முக்கியம்.

அப்போது தான் முகத்தில் படிந்துள்ள தூசிகள் வெளியேறி, முகம் பளபளப்புடன் இருக்கும்.



பேஸ்பேக்

முகத்தில் உள்ள கருமையை நீக்க ஏராளமான மற்றும் இயற்கையான ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன.

அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்களை போட்டுக் கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும்.



எலுமிச்சை

எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொருள்.

இதனை கொண்டு அல்லது எலுமிச்சை சாற்றை கொண்டு முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பொலிவுடன் அழகாக காட்சியளிக்கும்.



அழகு தரும் பழங்கள்

வாழைப்பழம், பப்பாளி, அவகேடோ போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை.

இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு, சருமத்திற்கு தடவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.



தயிர் மசாஜ்

முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று தயிர் மசாஜ்.

இதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், 7 நாட்களில் பலன் கிடைக்கும்.



கிளின்சிங்

சிறந்த கிளின்சிங் பொருள் கற்றாழை.

கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.



தண்ணீர் குடிக்கவும்

மிக முக்கியமான ஒன்று தினமும் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் ஜொலி ஜொலிக்கும், அத்துடன் முறையான உடற்பயிற்சிகளும் அவசியம்.

ஏழே நாட்களில் அழகு தேவதையாய் ஜொலிக்க........... Reviewed by NEWMANNAR on August 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.