இந்தோனேசியாவில் சூட்கேஸ் பெட்டிக்குள் அமெரிக்க பெண்ணின் உடல்! தொடரும் மர்மம்
இந்தோனேசியாவில் 62 வயதுடைய அமெரிக்க பெண் ஒருவரின் உடல் சூட்கேஸ் ஒன்றிற்குள் அடைக்கப்பட்டு பாலி தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அவரது மகளையும் மகளின் காதலனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஷீலா வென் வியஸ்ஸி மேக் என்பவரின் உடல் கடந்த செவ்வாய்கிழமை தரித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது 19 வயதுடைய மகள் ஹீத்தர் மேக் மற்றும் 21 வயதுடைய இவரது காதலன் டொமி ஷேபர்ஆகிய இருவரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் பலியானவர் தங்கியிருந்த அதே ஹோட்டேலில் தங்கி இருந்ததாகவும் இருவரும் சேர்ந்து சூட்கேசை குறித்த வாகனத்திற்குள் வைத்திருக்கலாம் என நம்புவதாக பாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் சூட்கேஸ் பெட்டிக்குள் அமெரிக்க பெண்ணின் உடல்! தொடரும் மர்மம்
Reviewed by NEWMANNAR
on
August 15, 2014
Rating:

No comments:
Post a Comment