அண்மைய செய்திகள்

recent
-

ஹீரோக்களுடன் நெருங்கி பழகுவது ஏன்? லட்சுமி மேனன் விளக்கம்

ஹீரோக்களுடன் நெருங்கி பழகுவது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் லட்சுமி மேனன்.கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் லட்சுமி மேனன். தற்போது கார்த்தி ஜோடியாக கொம்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். இவர் ஹீரோக்களுடன் நெருங்கி பழகுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

 இதுபற்றி லட்சுமிமேனன் கூறியதாவது,,,,

சக நடிகர்களுடன் நட்பாக இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் நடிப்பது எளிதாக இருக்கும். இல்லாவிட்டால் ஒரு நடிகருடன் நடிக்கும் போது அது அசவுகரியமாக தோன்றும். உடன் நடிக்கும் ஹீரோவோ, சக நடிகரோ நண்பராக இருந்தால் அதன் பலன் படத்தின் காட்சிகளில் பிரதிபலிக்கும். அது படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்றார். 

குடும்பப்பாங்கான நடிகை என்று பெயரெடுத்த லட்சுமி மேனன் நான் சிகப்பு மனிதன் படத்தில் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடித்து தனது குடும்பப்பாங்கு இமேஜை உடைத்தார். நெருக்கமான இந்த நடிப்புக்கு காரணம் விஷாலுடன் ஏற்பட்ட நட்புதான் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. மற்ற படங்களில் நடிக்கும் போதும் அந்த பட ஹீரோவுடன் நெருக்கமான நட்புடனே லட்சுமி மேனன் பழகுகிறாராம்.
ஹீரோக்களுடன் நெருங்கி பழகுவது ஏன்? லட்சுமி மேனன் விளக்கம் Reviewed by NEWMANNAR on August 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.