அடிக்கடி பெயர் மாற்றும் நடிகைகள்
கோலிவுட்டிலுள்ள சில ஹீரோயின்கள், தங்கள் பெயர்களை மாற்றி ரசிகர்களைக் குழப்பி வருகிறார்கள். ஹன்சிகா மோத்வானி என்ற பெயரில் அறிமுகமானவர், பிறகு மோத்வானியை துறந்தார். தமன்னா தன் பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது, கூடுதலாக ஒரு ஏ சேர்த்து கொண்டார். லட்சுமி ராய், ராய் லட்சுமி என்று மாற்றிக்கொண்டார்.
சுனேனா, தன் இயற்பெயரான அனுஷாவை பயன்படுத்தினார். ஒர்க்கவுட் ஆகாததால், மீண்டும் சுனேனா ஆகிவிட்டார். ஜனனி அய்யர் என்று அறிமுகமானவர், இப்போது ஜனனி ஆகிவிட்டார். ஹாசினி, சாரிகா என்று பெயரை மாற்றியுள்ளார்.
நந்தகி என்ற பெயரில் நடித்த மனோசித்ரா, அது ஒர்க்கவுட் ஆகாததால் மீண்டும் மனோசித்ரா ஆகிவிட்டார். தாமரை என்ற பெயரில் நடித்த ஷாம்னா காசிம், பூர்ணா ஆகிவிட்டார். கவிதா நாயர் என்ற பெயரில் நடித்தவர், மோகனா நாயர் என பெயர் மாறியுள்ளார். இதயா என்ற பெயரில் நடித்தவர், ஈடன் என்ற இயற்பெயரை பயன்படுத்துகிறார்.
பாவனா ராவ், தன் பெயரை ஷிகா என்று மாற்றி நடித்தார், மீண்டும் பாவனா ராவ் என்ற பெயரையே பயன்படுத்துகிறார். சில படங்களில் நடித்துள்ள அத்வைதா, இப்போது கீர்த்தி ஷெட்டி ஆகிவிட்டார்.
காதல் சரண்யா, சரண்யா நாக் என்று பெயர் மாற்றியுள்ளார். வசுந்தரா, இப்போது தன் பெயரை வசுந்தரா கஷ்யப் என்று போடுகிறார்.
அதுபோல் வர்ஷாவும் பெயரை வர்ஷா அஸ்வதி என்று பயன்படுத்துகிறார். மனீஷா யாதவ், இப்போது மனீஷா ஆகிவிட்டார். சுஜா, சுஜா வாருணி ஆகிவிட்டார். இதுபோல் மேலும் சில நடிகைகள் தங்கள் பெயரில் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்துள்ளனர். இது, நியூமராலஜி படுத்தும் பாடு. பெயரை மாற்றினால் முன்னணி ஹீரோயினாகி விடலாம் என்ற மனப்பான்மையில் இப்படி மாற்றுவதாகக் கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
அடிக்கடி பெயர் மாற்றும் நடிகைகள்
Reviewed by NEWMANNAR
on
August 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 08, 2014
Rating:


No comments:
Post a Comment