பரத்தின் 25ஆவது படம் ஒரு சாதனை!
பரத்தின் 25ஆவது படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’. கவிதாலயாவின் தயாரிப்பில் பரத் நடித்துள்ள இப்படம் இம்மாதம் 22ஆம் திகதி வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நந்திதா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், கருணாகரன், சாம்ஸ் உட்பட 22 நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தை இயக்கியிருக்கும் ரவிச்சந்திரன் படம் குறித்து, இது ஒரு முழுநீள நகைச்சுவை படம் என்றாலும் இதில் சித்த மருத்துவம் குறித்த நல்ல ஒரு தகவலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் ஒரு காட்சியில் சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்திருக்கிறார்கள். அதாவது ஒரு காட்சியில் பரத்துடன் 22 நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள அந்தக் காட்சி படம் பார்ப்போரை நீண்ட நேரம் சிரிக்க வைக்கும் வகையில் குறிப்பிடத்தக்க காட்சியாக அமைந்திருக்கிறது என்கிறார் இயக்குனர்.
பரத்தின் 25ஆவது படம் ஒரு சாதனை!
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:


No comments:
Post a Comment