தலைமன்னாரில் கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது
12 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் பெண்ணொருவர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் தலைமன்னார் பகுதியிலுள்ள வீடொன்றை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது வீட்டின் அலுமாரிக்குள் மறைத்து வைத்திருந்த கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியதுடன், சந்தேகநபரான பெண்ணையும் நேற்றுமாலை கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
34 வயதான இளம் பெண் ஒருவரே கஞ்சா போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு தலைமன்னார் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தலைமன்னாரில் கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:


No comments:
Post a Comment