மாணவர்கள் விவகாரத்தில் பாதுகாப்பு தரப்பினர் தலையீடு செய்யக் கூடாது – த.தே.கூ வலியுறுத்தல்
மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகளில் இராணுவத்தினர் தலையிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே சுரேஸ் பிரேமசந்திரன் இதனைக் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்த கருத்து:-
“ஒரு இராணுவப் புலனாய்வுப் பிரிவாக இருக்கலாம். அல்லது பங்கரவாத புலனாய்வுப் பிரிவாக இருக்கலாம். மிகவும் காட்டுமிராண்டித் தனமாக சட்டதிட்டங்கள் எதுவும் இல்லாமல் தாங்கள் விரும்பியவாறு எப்படியும் செயற்படலாம் அடிக்கலாம், உதைக்கலாம் குத்தலாம், கைது செய்யலாம், நாலாம் மாடிக்கு அழைக்கலாம்.
விசாரிக்கலாம்எதுவும் செய்லாம் என்ற அந்த சூழ்நிலையை நாங்கள் இங்கு பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலைமைதொடருமாக இருந்தால், மாணவர்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் இருக்குமாக இருந்தால். பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் இருக்குமாக இருந்தால், நீங்கள் வடக்கிலிருந்து தெற்கிற்கோ, தெற்கிலிருந்து வடக்கிற்கோ மாணவர்களை அனுப்புவதால் மாத்திரம் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வ உருவாக்க முடியாது. முதல் மாணவர்களை சுதந்திரமாக கற்பதற்கு அனுமதிக்க வேண்டும். மாணவர்களின் பிரச்சினையில் இராணுவம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.”
மாணவர்கள் விவகாரத்தில் பாதுகாப்பு தரப்பினர் தலையீடு செய்யக் கூடாது – த.தே.கூ வலியுறுத்தல்
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:


No comments:
Post a Comment