அண்மைய செய்திகள்

recent
-

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகள் மன்னாரில் ஆரம்பம்

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறாவது கட்ட பகிரங்க அமர்வுகள் மன்னார் மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளன. ஜனாதிபதி ஆணைக்குழுவின் மன்னார் மாவட்ட அமர்வுகள் இன்றும், நாளையும் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திலும், 10 ஆம் திகதி மன்னார் பிரதேச செயலகத்திலும், 11 ஆம் திகதி மடு பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ளன. 

 மன்னார் மாவட்டத்தின் 47 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக காணாமற்போனோர்களின் உறவினர்களுக்கு ஆணைக்குழுவினால் ஏற்கனவே அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. 

 ஆணைக்குழுவினால் இதுவரை கட்டம் கட்டமாக 786 முறைப்பாடுகள் தொடர்பில் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அவை சுயாதீன புலனாய்வுக் குழுவின் ஊடாக மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அமர்வுகளை நடத்தி முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகள் மன்னாரில் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on August 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.