அண்மைய செய்திகள்

recent
-

வரட்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்கள் பாதிப்பு

கடும் வரட்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 25,000 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

 தற்போதைய வரட்சியால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் டொமினிகோ ஜோர்ஜ் தெரிவித்துள்ளார். ஆறு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வரட்சியினால் 16 லட்சத்து 20 ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. 

 நான்கு லட்சத்து 68 ஆயிரத்து 329 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களே வரட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வரட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 52 ஆயிரத்து 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரட்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்கள் பாதிப்பு Reviewed by NEWMANNAR on August 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.