எபோலாவை குணப்படுத்தும் மருந்து இல்லை! உலக சுகாதார நிறுவனம்
உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் எபோலாவை குணப்படுத்தும் மருந்து இல்லை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்ரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ளது எபோலா வைரஸ்.
நாளுக்கு நாள் இந்நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது, இதனால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் எபோலாவை குணப்படுத்தும் மருந்து கண்டறியப்படவில்லை என்றும், 2015ம் ஆண்டுக்கு பிறகு கண்டுபிடித்து விநியோகிக்கப்படும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் உதவி டைரக்டர் ஜெனரல் மேரி– பால்கினி கூறியதாவது, உயிர்க்கொல்லி நோயான எபோலாவை கட்டப்படுத்தி குணப்படுத்த கூடிய மருந்தை தயாரிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த கிளாகோஸ்மித் கிலைன் என்ற மருந்து கம்பெனி முன்வந்துள்ளது.
இதற்கான பரிசோதனை அடுத்த மாதம்(செப்டம்பர்) தொடங்கப்பட உள்ளது. தற்போது ‘மாப்பயோ பார்ம சூடிகல்’ என்ற நிறுவனமும் மருந்து தயாரித்துள்ளது.
அதை ‘எபோலா’ வைரஸ் நோயால் ஆப்பிரிக்காவில் பாதிக்கப்பட்ட 2 அமெரிக்கர்கள் மற்றும் குரங்குகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று நடைபெறும் உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டத்தில், இம்மருந்தை நோயாளிகளுக்கு செலுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எபோலாவை குணப்படுத்தும் மருந்து இல்லை! உலக சுகாதார நிறுவனம்
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 11, 2014
Rating:


No comments:
Post a Comment