மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் பலி-Photo
மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தினுள் இன்று(29) வெள்ளிக்கிழமை மதியம் இடம் பெற்ற விபத்தில் மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிழந்தவர் மன்னார் உப்புக்குளத்ததைச் சேர்ந்த சாகுல் ஹமீட் முஹம்மது அன்சாருல்லா (வயது-58) என தெரிய வந்துள்ளது.
மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தினுள் வேகமாக நுழைந்த அரச பேருந்து ஒன்று குறித்த குடும்பஸ்தரை உறசிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் பேருந்திற்கு முன்பாக விழுந்துள்ளார்.
இந்த நிலையில் பேருந்து அவருடைய இடுப்பிற்கு மேலே ஏறியுள்ளது.
உடனடியாக அவர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
குறித்த பேருந்தின் சாரதியை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளதோடு குறித்த பேருந்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தினுள் தனியார் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படாத நிலையில் அரச பேருந்து தரிப்பிடத்தினுள் செல்லும் நுழைவாயிலில் 'பெரியல்' அமைக்கப்பட்டுள்ளதோடு,பாதுகாப்பு அலுவலகர் ஒருவர் கடமையில் அமர்ததப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பேருந்து பிரதான வீதியூடாக அரச பேருந்து தரிப்பிடத்தினுள் வேகமாக வந்ததினாலேயே குறித்த விபத்து இடம் பெற்றதாகவும்,பெரியல் மூடப்படாமல் காணப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் பலி-Photo
Reviewed by NEWMANNAR
on
August 29, 2014
Rating:
No comments:
Post a Comment