அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய களஞ்சியசாலைக்கு சீல்

இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் சீதுவை விநியோக நிலையத்திலுள்ள களஞ்சியத்திற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று சீல் வைத்துள்ளனர். 

 உணவு வகைகள் சுகாதாரமற்ற முறையில் பொதியிடப்பட்டிருந்தமையே இந்த நடவடிக்கைக்கு காரணம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் செனரத் பண்டார தெரிவித்துள்ளார். 

 சீல் வைக்கப்பட்ட போது குறித்த களஞ்சியத்தில் சுமார் ஒரு இலட்சம் கிலோகிராம் பச்சை அரிசியும், 30 ஆயிரம் கிலோகிராம் கீரி சம்பா அரிசியும், 35 ஆயிரம் கிலோகிராம் பாஸ்மதி அரிசியும், 24 ஆயிரம் கிலோகிராம் சிவப்பு சீனியும் இருந்தாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் சீதுவ விநியோக களஞ்சியசாலை முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் எதிர்வரும் செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய களஞ்சியசாலைக்கு சீல் Reviewed by NEWMANNAR on August 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.