அண்மைய செய்திகள்

recent
-

ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ . எஸ். ஐ. எஸ் ஆயுததாரிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா வான்தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலமும் கடற்படையினரின் போர் விமானங்கள் மூலமாகவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

 பொதுமக்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் மீது வான்தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்க ஜனாபதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் அனுமதி வழங்கியிருந்தார். இதனயைடுத்து நேற்று முதல் ஈர்பில் நகர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதுடன் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 இந்த தாக்குதல்களில் ஆயுததாரிகள் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பென்டகன் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் ஈராக்கிலிருந்து’ அமெரிக்க துருப்பினர் வெளியேறியதன் பின்னர் இரண்டாவது முறையாக அங்கு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடதக்கது
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் Reviewed by NEWMANNAR on August 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.