அண்மைய செய்திகள்

recent
-

வரட்சியால் 20 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் நிலைமைகளை நேரடியாக கண்டறிவதற்காக நியூஸ்பெஸ்ட் குழாத்தினர் இன்றும் சில பிரதேசங்களுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, நிலவியுள்ள வரட்சியினால் 14 மாவட்டங்களை சேர்ந்த ஐந்து இலட்சத்து 75 ஆயிரத்து 724 குடும்பங்களைச் சேர்ந்த 20 இலட்சத்து 7,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 18,541 குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சத்து 12 ஆயிரத்து 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 வரட்சியினால் அம்பாறை மாவட்டத்தில் 31,278 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சத்து 52 ,673 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 28 ,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் 53, 512 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 14 ஆயிரத்து 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

நிலவுகின்ற வரட்சியினால் வட மாகாணத்தில் ஒரு இலட்சத்து ஐயாயிரத்து 955 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இலட்சத்து 82,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு போதுமான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் செய்கையாளர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதுதவிர வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் வரட்சியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரட்சியால் 20 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு Reviewed by NEWMANNAR on August 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.