பாப்பரசரின் மடு விஜயம் தொடர்பாக பக்தர்களுக்கு அறிவிப்பு.
ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரும் பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் மறுநாள் 14 ஆம் திகதி மன்னார் மடு திருத்தலத்திற்கு வருகை தரவுள்ளார்.
பாப்பரசரின் மடு வருகையை கர்தினால் அதிமேதகு மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் நேற்று (15) மடுத்திருத்தலத்தின் திருவிழாவின் போது பக்தர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமியான்ஸ் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அருட்தந்தை எமியான்ஸ் பிள்ளை மேலும் தெரிவிக்கையில்,,,,,
திருத்தந்தை அவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
வருகை தரும் திருத்தந்தை 14 ஆம் திகதி காலை 8 மணிக்கு காலி முகத்திடலில் திருப்பலி ஒப்புக்கொடுத்து விட்டு மாலை 3 மணிக்கு வரலாற்று பிரசித்தி பெற்ற மடுத்திருத்தலத்திற்கு வருகை தர இருக்கின்றார்.
அவருடைய வருகையை நாங்கள் வரவேற்று நிற்கின்றோம்.அவர் மடுவிற்கு வந்து சுமார் ஒரு மணித்தியாலம் எமது மக்களோடு இணைந்து இறை வழிபாட்டில் ஈடுபட்டு அவர்களுக்கு ஆசிர் வழங்குவார்.
அன்றைய தினம் மாலை 3 மணிக்கு மன்னார் மடுத்திருத்தலத்தில் இடம் பெறும் நிகழ்வில் மருதமடு அன்னையின் திருச்சொரூப ஆசிர் வாதத்தை திருத்தந்தை வழங்கவுள்ளார்.
இது தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களும் இச் செய்தியை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
திருத்தந்தையின் வருகைக்காக செபிக்குமாறும், மடுத்திருத்தலத்தில் மூன்று நாள் வழிபாடுகள் இடம் பெறும் என்றும் அன்றைய தினம் மக்கள் கலந்து கொண்டு ஆசிர் வாதத்தை பெற்றுக்கொள்ளும் படி ஆயர் வேண்டியுள்ளதாகவும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமியான்ஸ் பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.
பாப்பரசரின் மடு விஜயம் தொடர்பாக பக்தர்களுக்கு அறிவிப்பு.
Reviewed by NEWMANNAR
on
August 16, 2014
Rating:
No comments:
Post a Comment