அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சௌத்பார் கடலில் 'டைனமெட்' வெடி பொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 500 கிலோ மீன்கள் அழிப்பு.Photo


மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் 'டைனமெட்' வெடி பொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 500 கிலோ விளமீன்கள் மன்னார் நீதிமன்றத்தின்  உத்தரவிற்கமைவாக மண்ணெண்ணெய்  ஊற்றி அழிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் பி.எஸ்.மெராண்டா தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை(14) மாலை சௌத்பார் கடற்பரப்பில் 'டைனமெட்' வெடிபொருள் பயண்படுத்தி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடலில் வைத்து மீனவர்கள் 12 பேரை கைது செய்த கடற்படையினர் அவர்கள் வைத்திருந்த 500 கிலோ விளமீன்களையும் பறிமுதல் செய்து மன்னார் பொலிஸாரினூடாக மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரகணைகளின் பின் குறித்த 12 மீனவர்களையும் நேற்று வெள்ளிக்கிழமை(15) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதோடு குறித்த மீன்களையும் மன்றில் ஒப்படைத்தனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த மீனவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததோடு குறித்த மீன்களை அழித்து விடுமாறும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக குறித்த மீன்கள் மண்ணெண்ணை ஊற்றி அழிக்கப்பட்டுள்ளதாகவும்,குறித்த மீன் பரிசோதனைக்காக கொழும்பு பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கை கிடைத்த நிலையில் மீண்டும்; இவ் வழக்கு விசாரணை  எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி (30-09-2014) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெறும் போது அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் பி.எஸ்.மெராண்டா மேலும் தெரிவித்தார்.






மன்னார் சௌத்பார் கடலில் 'டைனமெட்' வெடி பொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 500 கிலோ மீன்கள் அழிப்பு.Photo Reviewed by NEWMANNAR on August 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.